நானாகாட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நானேகாட் அல்லது நானாகாட் (Naneghat, also referred to as Nanaghat or Nana Ghat (IAST: Nānāghaṭ), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் அமைந்த புணே மாவட்டம், ஜுன்னர் தாலுகாவில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். மேலும் இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு கணவாய் மற்றும் குகைகள் உள்ளது. இது புணே நகரத்திற்கு வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பை நகரத்திற்கு கிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நானேகாட் குகைகள் கிமு இரண்டாம் நூற்றாண்டு காலத்திய சாதவாகனர் வம்ச இராணி நாகனிகா, பௌத்த பிக்குகளுக்காக நிறுவிய குடைவரைகள் உள்ளது. [1] இந்த நானாகாட் மலையில், கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டின் சாதவாகனர் காலத்திய பிராமி எழுத்துமுறைகளில் பொறிக்கப்பட்ட பாறைக் கல்வெட்டுக்களைக் கொண்டுள்ளது.[2] [3][4][5] இக்கல்வெட்டுக்கள் வேத கால தெய்வங்களின் பெயர்கள், சடங்குகள் மற்றும் சாதவாகன வம்ச மன்னர்களின் செய்திகள் கொண்டுள்ளது. [4][6] மேலும் நானாகாட் கல்வெட்டுக்கள் அக்காலத்திய எண்கள் கொண்டுள்ளது.[5][7][8]
இதனருகே 35 கிலோ மீட்டர் தொலைவில் புகழ்பெற்ற தேரவாத பௌத்தக் குடைவரைகளான லெண்யாத்திரி, கர்லா குகைகள் மற்றும் பாஜா குகைகள் உள்ளது.[9]
Regnal inscriptions
𑀭𑀸𑀬𑀸 𑀲𑀺𑀫𑀼𑀓 𑀲𑀸𑀢𑀯𑀸𑀳𑀦𑁄 𑀲𑀺𑀭𑀺𑀫𑀢𑁄
Rāyā Simuka - Sātavāhano sirimato
"King Simuka Satavahana, the illustrious one"[10]

Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads