நிலா (தொலைக்காட்சித் தொடர்)
தொலைக்காட்சித் தொடர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிலா என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச்சு 18, 2019 முதல் ஏப்ரல் 24, 2021 வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 12:00 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீகாந்த் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இணைத்து தயாரிக்க, பவித்ரா,[1] ஹேமத் மற்றும் வந்தனா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[2][3] இந்த தொடர் 24 ஏப்ரல் 2021 முதல் 489 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- பவித்ரா - நிலா கார்திக்
- ராஜீவ் ரவீந்திரன் (1-299) → ஹேமத் (300-489) - கார்திக்
- கவிதா சோலைராஜன் - ரேவதி/சுஜாதா
- ஷர்மிதா (1-304) → வந்தனா (305–412) → ஷர்மிதா (413-489) - நீலாம்பரி/பவானி
துணைக்கதாபாத்திரங்கள்
- ஸ்ரீதர் வினோத் - அசோக்
- தீப்தி - சூர்யா
- வெற்றி வேலன் - கதிர்வேலன்
- கரோலினா - ஸ்ரீ லதா
- ஸ்ரீதேவி அசோக் - வெண்மதி
- சாதனா - ஜீவிதா
- ஜீவா ரவி - ராஜசேகர்
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் முதலில் மார்ச்சு 18, 2019 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் அக்டோபர் 21, 2019 முதல் மதியம் 12:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 25, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு செப்டம்பர் 7, 2020 முதல் மீண்டும் மதியம் 12 மணிக்கு புதிய நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் மதியம் 12:30 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பாகிறது.பிப்ரவரி 13 , 2021 முதல் ஏப்ரல் 24 , 2021 மதியம் 12:00 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டது ஒளிபரப்பானது.
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஆப்பிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற வலையொளி இணைய அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணையம் மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads