நீலகிரி எக்ஸ்பிரஸ் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீலகிரி எக்ஸ்பிரஸ் (Neelagiri Express) என்பது 1968 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சோ ராமசாமி எழுதிய இப்படத்தை திருமலை மகாலிங்கம் இயக்கினார். டி. கே. ராமமூர்த்தி இசையமைத்தார். இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சோ, விஜய நிர்மலா, விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1967 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படமான கொச்சின் எக்ஸ்பிரஸ் (1967) படத்தின் மறு ஆக்கமாகும். [1] இந்தத் திரைப்படம் 1968 மார்ச் 23 அன்று வெளியாகி மற்றும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[2]
Remove ads
கதை
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்குச் செல்லும் நீலகிரி எக்ஸ்பிரஸ் தொடருந்தில் பயணிக்கும் செல்வந்தரான சபாபதி (வி. எஸ். ராகவன்) பயணிக்கிறார். அதே பெட்டியில் பயணிக்கும் ராவணனும் (சோ) அவருக்கு அறிமுகமில்லாத கலாவதி (விஜய லலிதா) என்ற மர்மப் பெண்ணும் அரக்கோணம் நிலையத்தில் உணவு சாப்பிடுவதற்காக இறங்கி வண்டியைத் தவறவிடுகின்றனர். ராவணனை திசைதிருப்பிய கலாவதி காணாமல் போகிறாள். இதற்கிடையில், தொடருந்தில் பயணித்த செலவந்தரான சபாபதி கொல்லப்படுகிறார். அந்தக் கொலையில் ராவணன் மீது சந்தேகம் எழுகிறது. கொலையாளியைப் பிடிக்கும் பணி சிஐடி ஆய்வாளர் சங்கரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ராவணன் குற்றமற்றவர் என்பதை உணர்ந்து விசாரணையைத் தொடங்குகிறார் சங்கர். பின்னர் ராவணனின் உதவியுடன் வழக்கைத் துப்புத்துலக்குகிறார். இறுதியில் கொலையாளியைக் சங்கர் கண்டுபிடிக்கிறார்.
Remove ads
நடிப்பு
- சி.ஐ.டி ஆய்வாளர் சங்கராக ஜெய்சங்கர்[1]
- கண்ணைக் கவரும் வில்லனாக எஸ். ஏ. அசோகன்[1]
- ராவணனாக சோ ராமசாமி [1]
- கீதாவாக விஜய நிர்மலா[1]
- கலாவதியாக விஜயலலிதா[1]
- சபாபதியாக வி. எஸ். ராகவன்[1]
- பூபதியாக எஸ். வி. இராமதாஸ்[1]
- குமாராக கே. விஜயன்
- மகாலட்சுமியாக எஸ். பார்வதி
- கீதாவின் தாயாக தாம்பரம் லலிதா
- கள்ளபார்ட் நடராஜன்[1]
- ஸ்ரீவித்யா ("திருத்தணி முருகா தென்னவா தலைவா" பாடலில் சிறப்பு தோற்றம்)
- பானுமதி ("திருத்தணி முருகா தென்னவா தலைவா" பாடலில் சிறப்பு தோற்றம்)
Remove ads
பாடல்கள்
இப்படத்திற்கு டி. கே. ராமமூர்த்தி இசையமைக்க, பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[சான்று தேவை]
வெளியீடும் வரவேற்பும்
நீலகிரி எக்ஸ்பிரஸ் 1968 மார்ச் 23 அன்று வெளியானது.[3] கதை உப்புச் சப்பின்றி இருப்பதாக கல்கி கூறியது.[4] இருந்தபோதிலும், இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads