நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2006 மக்கள் ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக [1] நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றம், 28 மே 2008ல் நேபாள நாட்டை சமயச்சார்பற்ற, நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு[2] (Federal Democratic Republic of Nepal) என அறிவித்தது.[3][4] இதனால் 240 ஆண்டுகால நேபாள மன்னராட்சி முடிவிற்கு வந்தது. மேலும் இதனை தற்காலிக நேபாள அரசியலமைப்புச் சட்டமும் உறுதிப்படுத்தியது.

நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் முதல் பிரதம அமைச்சராக கிரிஜா பிரசாத் கொய்ராலா 28 மே 2008 அன்று பொறுப்பேற்றார்.[5][6][7] நேபாளி காங்கிரஸ் கட்சியின் கிரிஜா பிரசாத் கொய்ராலா 18 ஆகஸ்டு 2008 அன்று பிரதம அமைச்சர் பதவியிலிருந்து விலகியதால், நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) கட்சியின் பிரசந்தா என்ற புஷ்ப கமல் தகால், 18 ஆகஸ்டு 2008 அன்று பிரதம அமைச்சராக பதவியேற்றார்.[6][7]

நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவராக ராம் பரன் யாதவ், 23 சூலை 2008 அன்று பொறுப்பேற்றார்.

Remove ads

சிறப்பம்சங்கள்

  • நேபாளத்தில் 240 ஆண்டுகால ஷா வம்ச மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. முன்னாள் நேபாள மன்னர் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்கள், அரச குடும்பச் சலுகைகள் இழந்து, சாதாரண பொதுமக்களாக கருதப்பட்டனர்.
  • இவ்வறிப்பு வெளியான 15 நாட்களில் நேபாள மன்னரும், மன்னர் குடும்பத்தினரும் நாராயணன்ஹிட்டி அரண்மனையை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர்.
  • நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் முதல் தலைவராக ராம் பரன் யாதவ், 23 சூலை 2008 அன்று பொறுப்பேற்றார்.
  • 23 சூலை 2008 அன்று நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராக ராம் பரன் யாதவ் பொறுப்பேற்றார்.
  • நாராயணன்ஹிட்டி அரண்மனை வரலாற்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
  • நேபாள அரசியலமைப்புச் சட்டப்படி, 20 செப்டம்பர் 2015 அன்று, நேபாளத்தை ஏழு மாநிலங்களாக பிரிக்கப்பட்டது.
  • நாட்டின் உயர்தலைவரான குடியரசுத் தலைவருக்கு முப்படைகளின் தலைமை அதிகாரியாகவும், அரசியல் அமைப்புச் சட்டப்படி, பணிபுரிய வேண்டும். அமைச்சரவையின் பரிந்துரையின் படி முப்படைகளை திரட்ட வேண்டும்.
  • 28 மே 2008 அன்று நேபாளம் தனது முதல் குடியரசு நாள் மற்றும் தியாகிகள் நாளையும் கொண்டாடியது.
Remove ads

2008 முதல் நேபாள ஜனநாயக கூட்டாச்சிக் குடியரசின் பிரதம அமைச்சர்கள் & குடியரசுத் தலைவர்கள்

மேலதிகத் தகவல்கள் வ. எண், படம் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads