நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நேபாள மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017, நேபாளம், ஓரவையுடன் கூடிய ஏழு மாநில சட்டமன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஏழு மாநிலங்களின் 550 சட்டமன்ற உறுப்பினர்களில், 330 உறுப்பினர்கள் நேரடியாகவும், 220 உறுப்பினர்கள் விகிதாசாரப்படியும் தேர்தலில் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 ஆகிய நாட்களில் இரண்டு கட்டங்களாக, ஏழு மாநில சட்டமன்றங்களின் தேர்தல் நடைபெற்றது.[1]
நேபாள சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். மாநிலங்களின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநில முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார்.
Remove ads
முதல் கட்ட வாக்குப் பதிவு
நேபாளத்தின் மலைப்பாங்கான 32 மாவட்டங்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு, 26 நவம்பர் 2017 அன்று நடைபெற்றது. முதல் கட்ட வாக்கு பதிவில் 65% வாக்காளர்கள் வாக்களித்தனர். 3.19 மில்லியன் வாக்காளர்கள் வாக்களித்தனர்.[2]
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு
இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு 7 டிசம்பர் 2017 அன்று நடைபெற்றது. இத்தேர்தல் காத்மாண்டு சமவெளி மற்றும் நேபாளத்தின் தெற்கு பகுதியில் உள்ள 45 நேபாள மாவட்டங்களில் நடைபெற்றது. இத்தேர்தலில் 2,35,993 வாக்காளர்கள் வாக்களித்தனர். [3]
வாக்கு எண்ணிக்கை
மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை 7 டிசம்பர் 2017ல் தொடங்கியது. முழு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் டிசம்பர், 2017க்குள் வெளிவரும். தற்போதைய வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, ஆளும் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் மற்றும் மாவோயிஸ்ட் மைய கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர். இரண்டாவதாக நேபாளி காங்கிரஸ் கூட்டணி உள்ளது. [4]
மாநிலங்கள் வாரியான முடிவுகள்
மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம் - மாவோயிஸ்ட் மையம் தலைமையிலான இடதுசாரி முன்னணி கட்சிகள், ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்ற நேரடித் தேர்தல் முறையிலும், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் பெருவாரியாக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. நேபாளி காங்கிரஸ் தலைமையிலான ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது.[5][6]
தேர்தல் முடிவுகள்
ஒட்டு மொத்த தேர்தல் முடிவுகள்
மாநில எண் 1
மாநில எண் 2
மாநில எண் 3
மாநில எண் 4
மாநில எண் 5
மாநில எண் 6
மாநில எண் 7
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads