கர்ணாலி பிரதேசம்

From Wikipedia, the free encyclopedia

கர்ணாலி பிரதேசம்
Remove ads

கர்ணாலி பிரதேசம் (Karnali Pradesh) (நேபாளி: कर्णाली प्रदेश) (முன்னாள் பெயர்:மாநில எண் 6), 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 20 செப்டம்பர் 2015ல் நிறுவப்பட்ட நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். [1]30,301 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,701,800 ஆகும். (1 சனவரி 2016ல்).[2] இம்மாநிலம் 10 மாவட்டங்களைக் கொண்டது.

விரைவான உண்மைகள் கர்ணாலி பிரதேசம் முன்னாள் பெயர் மாநில எண் 6 कर्णाली प्रदेश, நாடு ...


Thumb
கர்ணாலி பிரதேசத்தின் பத்து மாவட்டங்கள்

நேபாளத்தின் வடமேற்கில் அமைந்த கர்ணாலி பிரதேச மாநிலத்தின் முன்னாள் பெயர் மாநில எண் 6 ஆகும். பிப்ரவரி, 2018ல் பதவியேற்ற இம்மாநில சட்டமன்றத் தீர்மானத்தின் படி, இம்மாநிலத்தின் பெயர் கர்ணாலி பிரதேசம் பெயரிப்பட்டது.[3]சனவரி, 2018ல் விரேந்திரநகர் இம்மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.[4]

Remove ads

கர்ணாலி பிரதேசத்தின் மாவட்டங்கள்

கர்ணாலி பிரதேச்ம் 30,301 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 17,01,800 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:

1. மேற்கு ருக்கும் மாவட்டம்
2. சல்யான் மாவட்டம்
3. டோல்பா மாவட்டம்
4. சூம்லா மாவட்டம்
5. முகு மாவட்டம்
6. ஹும்லா மாவட்டம்
7. காளிகோட் மாவட்டம்
8. ஜாஜர்கோட் மாவட்டம்
9. தைலேக் மாவட்டம்
10. சுர்கேத் மாவட்டம்

அரசியல்

இம்மாநில சட்டமன்றம் 40 உறுப்பினர்கள் கொண்டது. அதில் 24 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 16 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மேலும் நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும் மற்றும் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 12 உறுப்பினர்களையும் இம்மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர்.

கர்ணாலி மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் கூட்டணி கட்சியான மாவோயிஸ்ட் கட்சியின் மகேந்திர பகதூர் சாகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார.[5] நேபாளி காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்கட்சியாக உள்ளது.

Remove ads

2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் அரசியல் கட்சி, நேரடித் தேர்தலில் ...

சுற்றுலாத் தலங்கள்

2023 நிலநடுக்கம்

இப்பிரதேசத்தில் 9 நவம்பர் 2023 நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட் மாவட்டம் மற்றும் மேற்கு ருக்கும் மாவட்டத்தில் வீடுகள் இடிந்து 150 மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர்.[6][7][8]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads