ந. செல்வராஜா

From Wikipedia, the free encyclopedia

ந. செல்வராஜா
Remove ads

நடராஜா செல்வராஜா (பி. அக்டோபர் 20, 1954) ஈழத்து நூலகவியலாளர், ஆய்வாளர், பதிப்பாளர். இலங்கை யாழ்ப்பாண மாவட்டம், ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையிலும் பிறநாடுகளிலும் வெளிவந்த ஈழத்து நூல்கள், ஈழம் தொடர்பான நூல்களின் விபரங்களைத் திரட்டி நூல் தேட்டம் எனும் பெயரில் தொகுத்து வருகிறார். 2024 ஆம் ஆண்டு வரை ஒவ்வொன்றும் ஆயிரம் நூல்கள் பற்றிய தகவல்களுடன் பதினேழு நூல் தேட்டத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. மேலும் சிங்கப்பூர், மலேசிய நூல்களுக்கான நூல் தேட்டத் தொகுதியொன்றும் வெளிவந்துள்ளது. யாழ்ப்பாணப் பொது நூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு செல்வராஜா எழுதிய பல நூல்களிலொன்றாகும்.[1][2] அயோத்தி நூலக சேவைகள் என்னும் பதிப்பு முயற்சியினூடாகப் பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அயோத்தி நூலக சேவைகள் 1985 முதல் 1991 வரை வெளியிட்ட நூலகவியல் காலாண்டிதழின் பிரதம ஆசிரியராகவிருந்த செல்வராஜா இப்பொழுது இங்கிலாந்தில் வசிக்கிறார்.

விரைவான உண்மைகள் ந. செல்வராஜா, பிறப்பு ...
Remove ads

நூலகராக

நடராஜா செல்வராஜா, யாழ். இராமநாதன் பெண்கள் கல்லூரியில் நூலகராகவும், யாழ்ப்பாண, சர்வோதய சிரமதான சங்கத்தின் யாழ்.மாவட்ட நூலகப் பொறுப்பாளராகவும், இலங்கை உள்ளூராட்சி அமைச்சின் நூலகராகவும், இந்தோனேசியா, ஐக்கியநாடுகள் சபையின் கிராமிய பொது நூலக அபிவிருத்திப் பிரதிநிதியாகவும், யாழ்ப்பாணம் ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகத்தின் பொறுப்பாளராகவும், கொழும்பு இனத்துவக் கல்விக்கான சர்வதேச நிலைய ஆய்வு நூலகப் பொறுப்பாளராகவும் பணியாற்றியவர்.[3]

Remove ads

அயோத்தி நூலக சேவை

இவரால் 1985 இல் அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனம் நிறுவப்பட்டது. இந் நிறுவனத்தின் முக்கிய நோக்கம் நூலகவியல் கல்வியை தமிழில் பரவலாக்குவதும் நூலகங்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்குரிய தீர்வுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை நிறுவனரீதியில் வழங்குவதுமாகும்.[4]

இவரது நூல்கள்

வெளி இணைப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads