மலேசிய மொழி
மலாய் மொழியில் உள்ள பேச்சுவழக்கு, மலேசியாவின் அதிகாரப்பூர்வ மொழி, மலேசிய அரசியலமைப்பின் 152 வது From Wikipedia, the free encyclopedia
Remove ads
பகாசா மலேசியா (Bahasa Malaysia) அல்லது மலேசிய மொழி (மலாய்) என்பது மலேசியாவின் அதிகாரப்பூர்வமான தேசிய மொழி ஆகும். மலேசிய மொழி, இந்தோனேசிய மொழியின் சொற்களில் 80 விழுக்காட்டு இணைச் சொற்களாகக் கொண்டது. இந்த மொழியை மலேசியா, சிங்கப்பூர், புருணை, தென் தாய்லாந்து, போன்ற நாடுகளில் உள்ள மக்களில் ஏறக்குறைய இரண்டு கோடி பேர் பயன்படுத்துகின்றனர்.
Remove ads
வரலாறு
1957ஆம் ஆண்டு, மலேசிய அரசியலமைப்பின் 152ஆம் பிரிவின்படி, மலாய் மொழி அதிகாரப்பூர்வமான மொழியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. 1986 லிருந்து 2007 வரை ’பகாசா மலேசியா’ எனும் சொல் வழக்கு ’பகாசா மலாயு’ என்று மாற்றம் செய்யப்பட்டது. இப்போது மறுபடியும் ’பகாசா மலேசியா’ என்று பழைய நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. [4] பகாசா மலேசியா மொழியைச் சாதாரண நடைமுறையில் பகாசா அல்லது BM என்று அழைக்கிறார்கள்.[5]
பயன்பாடு
மேற்கு மலேசியாவில் 1968ஆம் ஆண்டும் கிழக்கு மலேசியாவில் 1974ஆம் ஆண்டு மலேசிய மொழி, ஒரே அதிகாரப்பூர்வ மொழியானது. இருப்பினும், வர்த்தகத்துறை, உயர்நீதிமன்றங்களில் ஆங்கில மொழி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீன, தமிழ் மொழிகளை மற்ற சமூகத்தவரும் பயன்படுத்தி வருகின்றனர்.
Remove ads
மேற்கோள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads