பகோடா (நாணயம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தங்கத்தாலோ அரைத் தங்கத்தாலோ உருவாக்கப்பட்ட பகோடா (Pagoda) என்ற நாணயம் பல்வேறு இந்திய அரசாட்சிகளாலும் பிரித்தானிய, பிரெஞ்சு, டச்சு குடியேற்றவாத வணிக நிறுவனங்களாலும் பதிப்பிக்கப்பட்டன. கதம்பர் வம்சம், கோவாவின் கதம்பர்கள், விஜயநகரப் பேரரசு போன்ற தென்னிந்தியாவின் பல இடைக்கால பேரரசுகள் இந்த நாணயங்களை வெளியிட்டன. [1] வெளிநாட்டு வணிக நிறுவனங்கள் இரு வகையான பகோடாக்களை வெளியிட்டன. முதலாவதாக சென்னையிலிருந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் வெளியிட்ட நட்சத்திரப் பகோடா (ஸ்டார் பகோடா) என்ற நாணயம் ஏறத்தாழ 8 சில்லிங்குகளுக்கு சமமாக இருந்தது.[2] இரண்டாவது தூத்துக்குடி யிலிருந்து டச்சுக்காரர்கள் வெளியிடப்பட்ட போர்ட்டொ நோவோ பகோடா ஆகும். இதனை ஆற்காடு நவாபும் வெளியிட்டார். இதன் மதிப்பு நட்சத்திர பகோடாவைவிட 25% குறைவாக இருந்தது.[3]

Remove ads
இதனையும் காண்க
மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads