பங்சார் எல்ஆர்டி நிலையம்
கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள இலகுரக நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பங்சார் எல்ஆர்டி நிலையம் அல்லது பேங்க் ராக்யாட் – பங்சார் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bank Rakyat-Bangsar LRT Station; மலாய்: Stesen LRT Bank Rakyat-Bangsar) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும்.[2]
இந்த நிலையம் கோலாலம்பூர், பங்சார், பங்சார் சாலையின் நேர் மேலே அமைக்கப்பட்ட ஓர் உயர்த்திய நிலையிலான நிலையமாகும். பங்சார் சாலையில் அமைந்திருந்தாலும், இந்த நிலையம் பங்சார் புறநகர்ப் பகுதியின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.
Remove ads
பொது
செப்டம்பர் 1, 1998 அன்று செயல்பட தொடங்கிய இந்த நிலையம், அப்போது பங்சார் எல்ஆர்டி நிலையம் என்று அழைக்கப்பட்டது. கிளானா ஜெயா வழித்தடத்தின் உரிமையாளரான பிரசரானா மலேசியாவிற்கு, பெயரிடும் உரிமைகள் வழங்கப்பட்ட பின்னர், பேங்க் ராக்யாட்-பங்சார் எல்ஆர்டி நிலையம் என்று மறுபெயரிடப்பட்டது.[3][4]
நிலைய மேடைகள்
அனைத்து அடுக்கு நிலைகளும், மின்படிக்கட்டுகள் மற்றும் படிக்கட்டுகள் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தொடருந்து நின்று செல்லும் இடத்திற்கும் நடைபாதைக்கும் இடையில் சுமைதூக்கிச் சேவையும் வழங்கப்படுகிறது. நிலையத்தின் இரண்டு எதிர்த் திசைகளுக்கும் கீழே பங்சார் சாலை உள்ளது.
இந்த நிலையத்தில், தெருநிலை மட்டத்திலிருந்து நான்கு நுழைவாயில்கள் உள்ளன. ஆகவே பங்சார் சாலையின் இரண்டு புறங்களில் இருந்தும், சாலைக்கு மேலே இருக்கும் நிலையத்தை மின்படிக்கட்டுகள் மூலமாக அணுகலாம்.
Remove ads
பங்சார் சாலை
பங்சார் சாலை எனும் பங்சார் திராவர்ஸ் சாலை (ஆங்கிலம்: Bangsar Road; Jalan Travers-Bangsar) என்பது கோலாலம்பூர் நகரில் உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலை ஆகும்.[5]
2010-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சாலையின் புதிய கட்டுமானம் தொடங்கப்பட்டு; 2010-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நிறைவடைந்தது. திராவர்ஸ்-பங்சார் சந்திப்புகள் (Jalan Travers-Bangsar) மேம்பாலச் சந்திப்புகளாக மேம்படுத்தப்பட்டன.[6]
நிலைய தள அமைப்பு
L2 - இரண்டாவது மாடி | தீவு மேடையின் கதவுகள் வலதுபுறத்தில் திறக்கப்படும் | |
முதலாவது மாடி | ![]() | |
இரண்டாவது மாடி | ![]() | |
தீவு மேடையின் கதவுகள் வலதுபுறத்தில் திறக்கப்படும் | ||
L1 - முதலாவது மாடி | ஒருங்கிணைவு மேடை | கட்டணம் கட்டுப்பாடு, பயணச்சீட்டு தானியங்கி, நிலையக் கட்டுப்பாடு, கடைகள் & மெனாரா UOA-க்கு நேரடி அணுகல் |
G - தெருநிலை | தெருநிலை | பேருந்து முனையம் (→) வாடகை வாகனங்கள் முனையம் |
Remove ads
விரைவு பேருந்து வழித்தடங்கள்
சிங்கப்பூர் செல்லும் விரைவுப் பேருந்து சேவையான பர்ஸ்ட் கோச் (FirstCoach), இந்த நிலையத்திற்கு அருகிலுள்ள லெங்காக் அப்துல்லாவில் (Lengkok Abdullah) இருந்து புறப்படுகிறது.

காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads