பண்டார் மஞ்சலாரா

கோலாலம்பூர் மாநகராட்சிக்குள் உள்ள ஒரு நகரம். From Wikipedia, the free encyclopedia

Remove ads

பண்டார் மஞ்சலாரா, (மலாய்; ஆங்கிலம்: Bandar Menjalara; சீனம்: 孟加拉拉镇); என்பது மலேசியா, கோலாலம்பூர், கோலாலம்பூர் மாநகராட்சி பகுதிக்குள் உள்ள ஒரு முக்கிய நகரமாகும். இது கெப்போங் மற்றும் பண்டார் செரி டாமன்சாரா ஆகிய நகர்ப் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளது. மேலும் தாமான் புக்கிட் மலூரிக்கு அருகிலும் அமைந்துள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் பண்டார் மஞ்சலாரா, நாடு ...

மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் அவர்களின் தாயாரான படுகா செரி சிக் மஞ்சலாரா (Paduka Seri Cik Menjalara) என்பவரின் பெயர் இந்த இடத்திற்குச் சூட்டப்பட்டது. 1980-களில் நிறுவப்படுவதற்கு முன்பு இந்த இடம் எடின்பர்க் தோட்டம் (Edinburgh Estate) என்று அழைக்கப்பட்டது.

Remove ads

அமைவு

டாமன்சாரா-பூச்சோங் விரைவுச்சாலைக்கு அருகில் மஞ்சலாரா அமைந்துள்ளது. கோலாலம்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான மஞ்சலாரா ஏரிப் பூங்காவிற்கு அருகில் பண்டார் மஞ்சலாரா சமூகக் கூடம் அமைந்துள்ளது.

பண்டார் மஞ்சலாரா மற்றும் தாமான் புக்கிட் மலூரி ஆகிய இரு இடங்களுக்கு இடையிலான சந்திப்பில் டூத்தா-உலு கிள்ளான் விரைவுச்சாலைக்கான (Duta–Ulu Klang Expressway) ஒரு சரிவுத்தளம் உள்ளது. அத்துடன் பண்டார் மஞ்சலாராவிற்கு T108  பேருந்து சேவையும் உள்ளது. புத்ராஜெயா வழித்தடத்தின்  PY07  செரி டாமன்சாரா சென்ட்ரல் நிலையம் தொடங்கி பண்டார் மஞ்சலாரா வரை T108  பேருந்து சேவை உள்ளது.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads