நெக்பெத்

From Wikipedia, the free encyclopedia

நெக்பெத்
Remove ads

நெக்பெத் (Nekhbet)[1] வரலாற்றுக்கு முந்தைய எகிப்தின் (கிமு 3200–3100) பெண் கடவுள்களில் இவரும் ஆவார். மற்றவர் கீழ் எகிப்தின் பெண் காவல் தெய்வம் வத்செத் ஆவார். இவ்விருவரையும் சேர்த்து எகிப்திய தொன்மவியலில் இரு பெண்கள் என அழைப்பர்.

Thumb
பணிப்பெண் மற்றும் சென் மோதிரத்துடன் கழுகு உருவத்துடன் கூடிய பெண் கடவுள் நெக்பெத்
Thumb
கழுத்து அணிகலன் பதக்கத்தில் அரியணையில் அமர்ந்திருக்கும் போர்க் கடவுள் செக்மெத் சிலைக்கு (நடுவில்) பெண் கடவுளர்களான பாம்பு உருவத்துடன் கூடிய வத்செத் மற்றும் கழுகு உருவத்துடன் கூடிய நெக்பெத் பூஜை சடங்குகள் நடத்தும் காட்சி, ஆண்டு கிமு 870

கழுகு உருவத்துடன் அகன்ற சிறகுகளுடன் கூடிய நெக்பெத் பெண் கடவுளை நெக்பெப் நகரம் மற்றும் மேல் எகிப்தின் காவல் தெய்வம் எனக்கருதப்பட்டவர். எகிப்தின் முதல் வம்ச மன்னர் நார்மெர் மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தையும் ஒன்றிணைத்து பண்டைய எகிப்தை ஆட்சி செய்த காலத்தில் வத்செத் மற்றும் நெக்பெத் பெண் கடவுள்கள் எகிப்தின் காவல் தெய்வங்களாக விளங்கினர்.[2]

Remove ads

தொன்மவியல்

Thumb
நெக்பெத்தின் கோயிலின் நினைவுச் சின்னம், எல்-காப்

துவக்க கால எகிப்தில் நெக்ஹெப் அல்லது எல்-காப் நகரத்தில் நெக்பெத் பெண் தெய்வத்தின் கோயில் இருந்நது. இதனருகில் நெக்கென் நகரம் இருந்தது.

படவெழுத்துகளில் நெக்பெத் கடவுளை குறிக்க கழுகு சித்திரம் அல்லது சிற்பத்தில் குறிப்பர்.[3]

நெக்பெத் பெண் கடவுள் தனது சிறகுகளால் அரச சின்னத்தை மூடிக் காப்பார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads