பத்மநாபபுரம்

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

பத்மநாபபுரம்map
Remove ads

பத்மநாபபுரம் (Padmanabhapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

விரைவான உண்மைகள்
Remove ads

வரலாறு

பத்மநாபபுரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரம். 1795-இல் திருவிதாங்கூர் மன்னரான ராமவர்மா தலைநகரை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினர்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.244600°N 77.336700°E / 8.244600; 77.336700 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 66 மீட்டர் (217 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,549 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 21,342 ஆகும். அதில் 10,518 ஆண்களும், 10,824 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 93.2% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,029பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2120 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 956 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,264 மற்றும் 1 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 60.4% , இசுலாமியர்கள் 20.65%, கிறித்தவர்கள் 18.85% மற்றும் பிறர் 0.08% ஆகவுள்ளனர்.[4]

சுற்றுலா

திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய அரண்மனையான பத்மநாபபுரம் அரண்மனை இவ்வூரின் முக்கியமான சுற்றுலாத் தலமாகும். நுட்பமான மரவேலைப்பாடுகளைக் கொண்டுள்ள இவ் அரண்மனை ஆறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads