பந்திபோரா மாவட்டம்
சம்மு காசுமீர் ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பந்திபோரா மாவட்டம் (Bandipora district), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் பந்திபோரா ஆகும். பாரமுல்லா மாவட்டத்தின் சில பகுதிகளை கொண்டு 2007 ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட மாவட்டமாகும்.
Remove ads
மாவட்ட எல்லைகள்
345 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பந்திபோரா மாவட்டம் மேற்கில் குப்வாரா மாவட்டம், தெற்கில் பாரமுல்லா மாவட்டம், வடக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கிழக்கில் கார்கில் மாவட்டம், ஸ்ரீநகர் மாவட்டம் மற்றும் காந்தர்பல் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.[2]
நிர்வாகம்
பந்திபோரா மாவட்டம் பந்திபோரா, சும்பல், சோனாவாரி மற்றும் குருஸ் என நான்கு வருவாய் வட்டங்களை கொண்டுள்ளது. மேலும் குருஸ், பந்திபோரா மற்றும் சோனாவாரி என மூன்று சட்ட மன்ற தொகுதிகளையும் உடையது. இம்மூன்று சட்டமன்ற தொகுதிகளும் பாரமுல்லா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும்.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்ட மொத்த மக்கள் தொகை 392,232 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 207,680 ஆகவும், பெண்கள் 184,552 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 1,137 பேர் வீதம் உள்ளனர். மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 56.28% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 66.88% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 44.34% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 61,754 ஆக உள்ளது.[3].
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads