பனாஜிகா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பனாஜிகா (Banajiga) எனப்படுவோர் கருநாடக மாநிலத்தில் வாழ்ந்து வரும் ஒரு வணிக சமூகமாகும்.[1] இவர்களுள் பெரும்பாலானோரின் தாய்மொழி கன்னடம் மொழியாகும். தெலுங்கு பேசும் பனாஜிகா சமூகத்தினர் பெங்களூரில் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர்.
Remove ads
சொற்பிறப்பு
பனாஜிகா என்றால் வணிகன் என்று பொருளாகும். பனாஜிகா என்பது இடைக்கால பயன்பாட்டில் இருந்த சொற்களாலான பலஞ்சா, பனாஞ்சா, பளஞ்சா, பனஞ்சு, பளஞ்சியர் போன்ற சொற்களின் திரிபாகும். இவை அனைத்தும் வடமொழி சொல்லான வனிஜ் என்பதிலிருந்து பெறப்பட்டவையாகும்.[2]
பூர்வீகம்
அய்யபொழில் என்ற வணிகக்குழுவினர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் வணிகம் செய்தனர்.[4] கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டிலிருந்து, ஆந்திர நாட்டில் வீர பலஞ்சா என்ற வணிகக்குழுவினரை பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகள் தோன்றத் தொடங்கின. வீர பலஞ்சா வணிகர்களின் தலைமையிடமாக அய்யபொழில் திகழ்ந்தது.[5] அய்யபொழில் என்பது தற்கால கருநாடக மாநில பீசப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐஹோல் நகரமாகும்.[6] வீர பலஞ்சா வணிகர்கள் தங்களை அய்யபொழில் நகரத்தின் அதிபதி என்று அழைத்துக்கொள்கின்றனர். இந்த வணிகர்கள் தங்களை வீர பலஞ்சா தர்மத்தின் பாதுகாவலர்களாகக் காட்டிக் கொண்டனர்.[7] இவ்வணிகர்கள் கன்னடத்தில் வீர பனாஜிகா என்றும் தெலுங்கில் வீர பலிஜா என்றும் தமிழில் வீர வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர். இதன் பொருள் தீரமிக்க வணிகர்கள் என்பதாகும்.[8][9]
Remove ads
லிங்காயதம்
இவர்களில் பெரும்பாலோனோர் லிங்காயத்து மதத்தை பின்பற்றுகின்றனர். இவர்கள் கவரேஸ்வரர் வழிபடுவதன் காரணமாக கவரே பனாஜிக என்றும் லிங்காயத்து மதத்தை பின்பற்றுவதால் சிவாச்சாரி கவறை என்றும் அறியப்படுகின்றனர்.
அரச வம்சங்கள்
குறிப்பிடத்தக்க நபர்கள்
- பி. எஸ். எடியூரப்பா - கர்நாடகாவின் முதலமைச்சர்[11][12][13]
- எஸ். நிஜலிங்கப்பா - கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்[14][15][16].
- ஜே. ஹெச். படேல் - கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்[17] [18][19][20]
- எஸ். ஆர். காந்தி - கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் [21]
- வீரேந்திர பட்டீல் - கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்[22] [23]
- செகதீசு செட்டர்- கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்[24][25] .
- பசப்பா தனப்பா ஜாட்டி- கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர்[26]
- ஜெகதீஷ் ஷெட்டர் - கர்நாடக முன்னாள் முதல்வர்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads