பம்பாய் சகோதரிகள்

கருநாடக இசைப் பாடகர்கள் From Wikipedia, the free encyclopedia

பம்பாய் சகோதரிகள்
Remove ads

பம்பாய் சகோதரிகள் (Bombay Sisters, சி. சரோஜா (பிறப்பு: 7 திசம்பர் 1936), சி. லலிதா (26 ஆகத்து 1938 – 31 சனவரி 2023) ஆகியோர் கருநாடக இசைப் பாடகர்கள் ஆவர். இவ்விருவரும் இசை மேடைகளில் இணைந்து பாடினர்.

விரைவான உண்மைகள் பம்பாய் சகோதரிகள், பின்னணித் தகவல்கள் ...
Remove ads

ஆரம்பகால வாழ்க்கை

பம்பாய் சகோதரிகளான சி. சரோஜா, சி. லலிதா ஆகியோர் கேரளத்தின் திருச்சூரில் முக்தாம்பாள் - என் சிதம்பர ஐயர் ஆகியோருக்கு மகள்களாக பிறந்தனர். சகோதரிகள் இருவரும் அப்போதைய பம்பாயின் மட்டுங்காவில் பள்ளிக் கல்வி பயின்று, தில்லி பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தனர். இவர்கள் எச். ஏ. எஸ். மணி, முசிரி சுப்பிரமணிய ஐயர், டி. கே. கோவிந்த ராவ் ஆகியோரிடம் இசைப்பயிற்சி பெற்றனர்.

தொழில் வாழ்க்கை

1963 ஆம் ஆண்டு முதல் பாடி வரும் இச்சகோதரிகள், பம்பாயில் இருந்து சென்னை வந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தியதால் இருவரும் பம்பாய் சகோதரிகள் என்ற பெயர் பெற்றனர். இவர்கள் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமசுகிருதம், இந்தி, மராத்தி ஆகிய மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளனர்.

குடும்பம்

வழக்கறிஞரான என். ஆர். சந்திரனை லலிதா மணந்தார். என் ஆர். சந்திரன் தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞராவார். லலிதா சந்திரன் 2023 சனவரி 31 அன்று தன் 84வது அகவையில் இறந்தார்.[1]

விருதுகள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads