பவநாத்

From Wikipedia, the free encyclopedia

பவநாத்
Remove ads

பவநாத் (Bhavnath) இந்தியாவின் மாநிலமான குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்தின் அருகே கிர்நார் மலையின் அடிவாரத்தில் அமைந்த சிறு கிராமம் ஆகும்.

Thumb
ஜூனாகத், கிர்நார் மலை, குஜராத், இந்தியா
Thumb
பவநாத் மகாதேவர் கோயில், பவநாத்
Thumb
அசோகர் கல்வெட்டுக்கள், கிர்நார் மலை, குஜராத்

வரலாறு

கிர்நார் மலை அடிவாரத்தில் உள்ள பவநாத் கிராமத்தில் மகாதேவர் கோயில் உள்ளது. [1] பவநாத்தில் உள்ள கிர்நார் மலையில் அசோகர் கல்வெட்டுக்கள் உள்ளது.

விழாக்கள்

இந்து மற்றும் சமணர்களுக்கு புனிதமான பவநாத் கிராமத்தில், ஆண்டு தோறும், மகா சிவராத்திரியும் கிர்நார் கிரிவலம் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.[2]

மாசி மாத மகா சிவராத்திரி ஒட்டி ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவின் போது இராஜஸ்தானின் மேவார், குஜராத்தின் கட்ச், உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் நாகா சாதுக்களும் இங்கு வருகின்றனர். [3] [4]

கிரிவலம் நிகழ்வின் போது தத்தாத்ரேயர் ஐந்து நாட்கள் பவநாத் கிராமத்தில் தங்கியிருப்பார் என இந்துக்கள் கருதுகிறார்கள்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads