கிர்நார்

From Wikipedia, the free encyclopedia

கிர்நார்
Remove ads

கிர்நார் மலை அல்லது ரைவத மலை (Girnar or Revatak Pravata) , இந்திய மாநிலமான குஜராத்தின் ஜூனாகாத் மாவட்டத்தின் தலைமையிடமான ஜூனாகத் நகரத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. பௌத்தர்களும், இந்துக்களும் மற்றும் சமணர்களும் கிர்நார் மலையைப் புனித தலமாக கருதுகின்றனர்.[1] 3661 அடி உயரம் கொண்ட கிர்நார் மலை 3,800 படிகளுடன் கூடியது. இதிகாச, புராணங்களில் இம்மலையை ரைவத மலை எனக்குறித்துள்ளது. இங்கு பேரரசர் அசோகரின் பாறைக் கல்வெட்டு உள்ளது. இது ஜூனாகத் நகரத்திற்கு கிழக்கில் 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

விரைவான உண்மைகள் கிர்நார் மலை, உயர்ந்த புள்ளி ...

மகாதேவர் கோயில் கொண்ட கிர்நார் மலை, இமயமலையை விட மிகப்பழமையானது.[2] இம்மலைகளில் கிர்நார் சமணக் கோயில்கள் உள்ளது.

Remove ads

தொன்ம வரலாறு

தத்தாத்ரேயர் கிர்நார் மலைப் பகுதிகளில் தங்கி வாழ்ந்தாக இந்துக்கள் கருதுகின்றனர். 22வது சமண சமய தீர்த்தங்கரான நேமிநாதர் கிர்நார் மலையில் முக்தி அடைந்தவர். தாமோதரன் கிர்நார் மலையின் அதிபதியாகப் போற்றப்படுவதால், இம்மலைய வைணவர்களும் புனிதமாக கருதுகின்றனர். தொன்ம காலத்தில் இம்மலையை ரைவத மலை என்று அழைத்தனர். தத்தாத்ரேயர் இம்மலையில் பலகாலம் தங்கியிருந்தாக கருதப்படுகிறது.

கிர்நார் மலைக் குகையில் முசுகுந்த சக்கரவர்த்தி நீண்ட கால துயில் கொண்டிருகையில், கிருட்டிணனைத் துரத்திக் கொல்ல வந்த காலயவனன் எனும் அரக்கன், குகையில் உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தனை கிருஷ்ணன் என நினத்து எழுப்பியதால், முசுகுந்தனின் கண் பார்வை பட்டவுடன் காலயவனன் எரிந்து சாம்பலானான். பின்னர் கிருஷ்ணரின் அறிவுரைப் படி முசுகுந்தன் பத்ரிநாத்திற்குச் சென்று தவமிருந்து வீடுபேறு பெற்றார்.

Remove ads

மலைக் கோயில்கள்

Thumb
பவநாத் மகாதேவர் கோயில், கிர்நார் மலை அடிவாரம்
Thumb
பிராமி எழுத்துமுறையிலான அசோகரின் முதல் கல்வெட்டு கிர்நார் மலை
Thumb
கிர்நார் ஜெயின் கோயில் கோபுரம்

3666 அடி உயரமும், 4, 000 படிக்கட்டுகளும் கொண்ட கிர்நார் மலையில் பல இடங்களில் சமண தீர்த்தங்கரகளின் கோயில்கள், மகாதேவர் கோயில், கோர்க்கநாதர் மற்றும் தத்தாத்ரேயர் கோயிலும் உள்ளது. குஜராத் மாநிலத்தின் மிக உயரந்த மலையான கிர்நார் மலையின் ஐந்து கொடுமுடியின் கீழ் 866 இந்து மற்றும் சமணர் கோயில்கள் பரவி உள்ளது.

Remove ads

திருவிழாக்களும் பண்டிகைகளும்

சமணர்களுக்கு கிர்நார் மலையை வலம் வருதல் முக்கிய விரதமாக உள்ளது. இந்துகளுக்கு மகா சிவராத்திரி விரதமாக உள்ளது.

அசோகரின் கல்வெட்டுகள்

அசோகரின் 3 பெரும்பாறைக் கல்வெட்டுகளில் இரண்டில் ஒன்று குஜராத் மாநிலத்தின் ஜூனாகத் நகரத்திலும், மற்றொன்று ஜூனாகத் அருகே அமைந்த கிர்நார் மலையில் உள்ளது.[3][4] [5] [6]

போக்குவரத்து வசதிகள்

பேருந்து

கிர்நார் மலை, அகமதாபாத்திலிருந்து 327 கிலோ மீட்டரும், ராஜ்கோட்டிலிருந்து 102 கிலோ மீட்டரும், போர்பந்தரிலிருந்து 113 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. சிற்றுந்து மற்றும் பேருந்துகளே சிறந்த பயணச் சாதனம் ஆகும்.

தொடருந்து

அகமதாபாத் மற்றும் ராஜ்கோட் நகரங்கங்களிலிருந்து வேராவல் செல்லும் தொடருந்துகள் மூலம் ஜூனாகத் நகரத்தில் இறங்கி பின்னர் கிர்நார் மலையை அடையலாம்.

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads