பாங்குரா மாவட்டம்
மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாங்குரா மாவட்டம் (Bankura district) (Pron: baŋkuɽaː) (Bengali: বাঁকুড়া জেলা) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் இருபது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பாங்குரா ஆகும். மேற்கு வங்காள மாநிலத்தின் மூன்று கோட்டங்களில் ஒன்றான வர்தமான் கோட்டத்தில் இம்மாவட்டம் அமைந்துள்ளது.
Remove ads
புவியியல்
பர்த்வான் கோட்டத்தில் உள்ள பாங்குரா மாவட்டம், வடகிழக்கில் வர்தமான் மாவட்டம், தென்கிழக்கில் ஹூக்லி மாவட்டம், தெற்கில் மேற்கு மிட்னாபூர் மாவட்டம், மேற்கில் புருலியா மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.[2][3]
மாவட்ட நிர்வாகம்
6,882 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பாங்குரா மாவட்டம் பாங்குரா சதர், காட்ரா மற்றும் விஷ்ணுபூர் என 3 வருவாய் வட்டங்களும்,. 22 ஊராட்சி ஒன்றியங்களும்[4], 3 நகராட்சி மன்றங்களும், 190 ஊராட்சி மன்றங்களும், 5,187 கிராமங்களும் கொண்டுள்ளது.
பாங்குரா சதர் உட்கோட்டமானது பாங்குரா I, பாங்குரா II, பர்ஜோரா, சாட்னா, கங்காஜல்காடி, மெஜ்ஜியா, ஓண்டா மற்றும் ஷால்தோரா என எட்டு ஊராட்சி ஒன்றியங்களும், பாங்குரா என்ற ஒரு நகராட்சியும் கொண்டுள்ளது.
காட்ரா உட்கோட்டமானது இந்த்பூர், காட்ரா, ஹிர்பந்த், இராய்பூர், சரெங்கா, இராணிபந்த், சிம்லாபல் மற்றும் தால்டங்கரா என எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் கொண்டுள்ளது.
விஷ்ணுபூர் வருவாய் வட்டம் விஷ்ணுபூர் மற்றும் சோனாமுகி எனும் இரண்டு நகராட்சிகளும், இந்தஸ், ஜாய்பூர், பத்ரசாயார், கோட்டுல்பூர், சோனாமுகி மற்றும் விஷ்ணுபூர் என ஆறு ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டுள்ளது.
அரசியல்
இம்மாவட்டம் தல்டங்கரா, இராய்பூர் (பாங்குரா), இராணிபந்த் (பழங்குடி மக்கள்), இந்துப்பூர், (தலித்), சாட்னா, கங்காஜல்காட், கங்காஜல்காட் (தலித்), பர்ஜோரா, பாங்குரா, விஷ்ணுபூர், கட்டுல்பூர், இந்தஸ் (தலித்) மற்றும் சோனாமுகி (தலித்) என பதின்மூன்று சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.[5]
Remove ads
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 35,96,674 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,838,095 மற்றும் பெண்கள் 1,758,579 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 957 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 523 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 70.26% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.05% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 60.05% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 418,650 ஆக உள்ளது.[6]
சமயம்
இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 3,033,581 ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 290,450 ஆகவும், கிறித்தவர்களின் மக்கள்தொகை 3,865 ஆகவும், சமண சமயத்தவர்களின் எண்ணிக்கை 2,904 ஆகவும், பிற சமயத்தவர்களின் மக்கள்தொகை 265,694 ஆகவும் உள்ளது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads