பாசிப்பட்டினம்

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாசிப்பட்டினம் (Paasippattinam) இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த கலியநகரி ஊராட்சியில் வங்காள விரிகுடாவின் கடற்கரை கிராமம் ஆகும். இக்கிராமம் கிழக்கு கடற்கரை சாலையில் தொண்டிக்கும் - சுந்தரபாண்டியன்பட்டினத்திற்கும் இடையே அமைந்துள்ளது.

வங்காள விரிகுடா கடற்கரை கிராமமான பாசிப்பட்டினத்தின் அஞ்சல் சுட்டு எண் 623 409 ஆகும். இதனருகில் உள்ள அஞ்சலகம் தொண்டியில் உள்ளது. தொலைபேசி குறியீடு எண் 0561 ஆகும். இக்கிராமத்தினரின் முக்கியத் தொழில் கடல் மீன் பிடித்தல் ஆகும். இக்கிராமத்தில் இசுலாமியர்களும், அதிகம் வாழ்கின்றனர்.

பாசிப்பட்டினம், வருவாய் வட்டத் தலைமையிடமான திருவாடானையிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; பேரூராட்சியான தொண்டிக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவிலும், சுந்தரபாண்டியன்பட்டினத்திற்கு தெற்கே 4 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைமையிட நகரம் இராமநாதபுரத்திலிருந்து 71 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பாசிப்பட்டினம் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாசிப்பட்டினத்திற்கு வடக்கில் ஆவுடையார்கோயில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், மேற்கில் கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், தெற்கில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

பாசிப்பட்டினத்திற்கு அருகமைந்த நகரங்கள் தேவகோட்டை, காரைக்குடி மற்றும் பேராவூரணி ஆகும். இந்த கிராமத்தில் புகழ் பெற்ற "மகான் சர்தார் நெய்னா முகமது ஒலியுல்லா"வின் தர்கா அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads