பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pasir Gudang; ஆங்கிலம்: Pasir Gudang Federal Constituency; சீனம்: 巴西古当国会议席) என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் பாரு மாவட்டம்; கூலாய் மாவட்டம்; கோத்தா திங்கி மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P159) ஆகும்.[6]
பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[7]
Remove ads
பாசிர் கூடாங்
பாசிர் கூடாங், ஜொகூர் மாநிலத்தில் ஜொகூர் பாரு மாவட்டத்தில்; அமைந்துள்ள ஒரு மாநகரம். இது ஒரு தொழில்துறை நகரமாகும். போக்குவரத்துத் தளவாடங்கள் உற்பத்தி; கப்பல் கட்டுதல்; இரசாயனப் பொருகள் உற்பத்தி; கனரகத் தொழில்கள்; எண்ணெய் பனை சேமிப்பு; விநியோகம் ஆகியவை இந்த நகரத்தின் முக்கிய தொழில்கள் ஆகும்.[8]
கம்போங் உலு எனும் இடத்தில் இருந்த ஒரு மணல் சுரங்கத்தில் இருந்து, பாசிர் கூடாங் என்ற பெயர் உருவாகி இருக்கலாம் என்று அறியப் படுகிறது. மலாய் மொழியில் பாசிர் என்றால் மணல். கூடாங் என்றால் பொருள் சேமிப்புக் கட்டடம். அந்த வகையில் இந்த இடத்திற்குப் 'பாசிர் கூடாங்' என்று பெயர் வந்து இருக்கலாம் என்றும் அறியப் படுகிறது.
பாசிர் கூடாங் பகுதியில் 1890-ஆம் ஆண்டுகளிலேயே தமிழர்கள் குடியேறி விட்டார்கள். ஏறக்குறைய 130 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். 1916-ஆம் ஆண்டு வரையில், 15,000 ஏக்கர் (61 சதுர கி.மீ.) பரப்பளவு கொண்ட ஆறு ரப்பர், காபித் தோட்டங்கள் பாசிர் கூடாங்; பிளந்தோங் பகுதிகளில் திறக்கப் பட்டன.[9]
Remove ads
பாசிர் கூடாங் மக்களவைத் தொகுதி
பாசிர் கூடாங் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)
ஆண் (50.63%)
பெண் (49.37%)
பாசிர் கூடாங் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)
18-20 (7.59%)
21-29 (24.52%)
30-39 (21.51%)
40-49 (17.72%)
50-59 (15.8%)
60-69 (9.04%)
70-79 (3.01%)
80-89 (0.7%)
+ 90 (0.11%)
Remove ads
பாசிர் கூடாங் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads