மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026
விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026 (மலாய்: Parlimen Malaysia ke-15; ஆங்கிலம்: 15-th Parliament of Malaysia என்பது மலேசியக் கூட்டமைப்பின் பதினைந்தாவது மக்களவை ஆகும். இந்த 15-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் 28 ஏப்ரல் 19 டிசம்பர் 2022-இல் நடைபெற்றது.[1][2]
2022-ஆம் ஆண்டு மலேசிய பொதுத்தேர்தல் (2022 Malaysian General Election) நடைபெற்ற பின்னர் பதினைந்தாவது மக்களவை கூடியது. மக்களவை தலைவராக ஜொகாரி அப்துல் தலைமை தாங்கினார். துணை மக்களவைத் தலைவர்களாக ரம்லி முகமட் நோர்; அலிசு லாவ் கியோங் இயேங் பொறுப்பு வகித்தனர்.
இந்த மக்களவையில் முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராகீம் அவர்களின் தலைமையிலான பாக்காத்தான் கூட்டணி; 147 இடங்களைப் பெற்று ஆளும் கூட்டணியாக ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சியினர் 69 இடங்களைப் பெற்றனர்.
Remove ads
பொது
அரசியல் நெருக்கடிகள்
2020-ஆம் ஆண்டுக்கும்; 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், மலேசியாவில் பற்பல அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டன. அவற்றின் காரணமாக, தேசிய அளவில் முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடைபெறலாம் எனும் ஓர் ஆருடம் நீடித்து வந்தது.
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி விட்டுக் கட்சி தாவியதாலும்; தாங்கள் சார்ந்த கட்சிகளின் கூட்டணிகளை மாற்றிக் கொண்டதாலும்; 2020-ஆம் ஆண்டுக்கும்; 2022-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்தில், மலேசிய அரசியலில் ஓர் உறுதித் தன்மை இல்லாமல் இருந்தது. அதே வேளையில் கோவிட்-19 தொற்று நோய் நெருக்கடிகளும் இடர்பாடுகளும் இணைந்து கொண்டன.
2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்
2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் இரு பிரதமர்கள் பதவி ஏற்றனர். இரு கூட்டணி அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. இருப்பினும் இரண்டு அரசாங்கங்களும் எதிர்பாராத சரிவு நிலைகளைக் கண்டன; அந்த இரண்டு அரசாங்கங்களின் பிரதமர்களும் தங்களின் பதவிகளைத் துறக்க வேண்டிய இக்கட்டான நிலைமையும் ஏற்பட்டது.
மலேசியாவின் 14-ஆவது மக்களவைத் தொடர் 2023 சூலை 16-ஆம் தேதி காலாவதியாக இருந்தது. இருப்பினும், அப்போதைய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் வேண்டுகோளின்படி, மலேசிய மாமன்னர், சுல்தான் அப்துல்லா அவர்கள், 2022 அக்டோபர் 10-ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றத்தைக் கலைத்தார். அதன் பின்னர் 2022-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றது.[3]
Remove ads
15-ஆவது பொதுத் தேர்தல் முடிவுகள்

Remove ads
15-ஆவது மக்களவையில் ஏற்பட்ட மாற்றங்கள்
நவம்பர் 2022 - சனவரி 2024
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads