பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம்
சா ஆலாம் பாடாங் ஜாவா பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Padang Jawa Komuter Station; மலாய்: Stesen Komuter Padang Jawa); சீனம்: 巴当爪哇) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் சா ஆலாம் பாடாங் ஜாவா பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையத்திற்கு பாடாங் ஜாவா கிராமத்தின் பெயரில் பெயரிடப்பட்டது. பாடாங் ஜாவா என்பது சா ஆலாம் மற்றும் கிள்ளான் நகரங்களுக்கு இடையே உள்ள ஒரு கிராமமாகும். மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Universiti Teknologi MARA) பிரதான வளாகம் இந்த நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.[2]
தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம் சா ஆலாம் - கிள்ளான் நகரங்களுக்கு இடையில் உள்ளது; மற்றும் அங்குள்ள போக்குவரத்தைப் பூர்த்தி செய்வதற்காகக் கட்டப்பட்டது.
Remove ads
பொது
முன்பு காலத்தில், கோலா சிலாங்கூர் நகருக்கு 47 கி.மீ தொலைவு கொண்ட ஒரு கிளைப் பாதை இந்த நிலையத்திலிருந்து தொடங்கியது. இருப்பினும் அந்தக் கிளைப் பாதை 1930-களில் மூடப்பட்டது.[3]
பாடாங் ஜாவா குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த நிலையம் சேவை செய்கிறது; மற்றும் இந்த நிலையம் கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[4]
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்களிலும், பொது விடுமுறை நாட்களிலும் மிகவும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையத்திற்கு அருகில் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இருப்பதால் பல்கலைக்கழகத்தின் மாணவர்களை அதிகமாகக் காணலாம்.
இந்த நிலையத்திற்கு அருகில் சா ஆலாம் கொமுட்டர் நிலையம்; புக்கிட் பாடாக் கொமுட்டர் நிலையம் ஆகிய நிலையங்கள் உள்ளன. நகர மையத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல பேருந்துகள் மற்றும் வாடகை வாகனங்கள் எளிதாகக் கிடைக்கின்றன.
இஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து வழித்தடம் (Smart Selangor Bus route SA04) சா ஆலாம் பிரிவு 7-ஐ பாடாங் ஜாவா நகர்ப்பகுதியுடன் இணைக்கிறது. இருப்பினும், அருகிலுள்ள பள்ளி அல்லது ஞாயிற்றுக்கிழமை காலைச் சந்தை ஆகியவற்றின் நெரிசல் காரணமாக SA04 பேருந்து பாடாங் ஜாவா பேருந்து நிறுத்தத்திற்குள் நுழையாமல் செல்லலாம்.
Remove ads
சா ஆலாம்
சா ஆலாம் மாநகரம் சிலாங்கூர் மாநிலத்தில், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள மாநகரம்; சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரம். மலேசியாவில் நவீனமாக வடிவு அமைக்கப்பட்ட ஒரு புதிய நகரம்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ அல்லது 16 மைல்கள் மேற்கே அமைந்து உள்ளது. 1978-இல் சிலாங்கூர் மாநிலத்தின் தலைநகரமாக சா ஆலாம் பிரகடனம் செய்யப்பட்டது. மலேசியாவில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நகரங்களில் சா ஆலாம் முதல் நகரமாகப் புகழ் பெறுகிறது.[5]
இந்த நகரத்தின் சாலைகள், கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள், மக்கள் குடியிருப்பு அடுக்குமாடிக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், பூங்காக்கள், வணிகத் தளங்கள், மருத்துவ மையங்கள், பொழுது போக்கு மையங்கள் அனைத்துமே திட்டமிடப்பட்டு மிக நவீனமாக, உருவாக்கப்பட்டுள்ளன.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads