பாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)

தொலைக்காட்சி நாடகத் தொடர் From Wikipedia, the free encyclopedia

பாரதி கண்ணம்மா (தொலைக்காட்சித் தொடர்)
Remove ads

பாரதி கண்ணம்மா என்பது விஜய் தொலைக்காட்சியில் பெப்ரவரி 25, 2019 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[1][2]

விரைவான உண்மைகள் பாரதி கண்ணம்மா, வகை ...

இந்த தொடரில் பாரதியாக மேயாத மான் என்ற படத்தில் நடித்த அருண் பிரசாத் நடிக்கிறார். ரோஷினி ஹரிப்ரியன் / வினுஷா தேவி கண்ணம்மாவாகவும், நடிகை சுவீட்டி / அருள்ஜோதி ஆரோக்கியராஜ் அஞ்சலியாகவும் நடித்துள்ளனர். இந்த தொடரின் இறுதி அத்தியாயம்6 ஆகத்து 2023 அன்று ஒளிபரப்பப்பட்டு, 1,169 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடரின் இரண்டாம் பாகம் கண்ணம்மா 2 பேரில் 6 பிப்ரவரி 2023 முதல் 8 ஆகஸ்ட் 2023 வரை ஒளிபரப்பானது.

Remove ads

கதைச்சுருக்கம்

கண்ணம்மாவும் அஞ்சலியும் இருவரும் மாற்றாந்தாய் சகோதரிகள். கண்ணம்மா கருத்த நிறம் கொண்டவள். அஞ்சலி வெள்ளை நிறம் கொண்டவள்.

கண்ணம்மாவுக்கு நல்ல உள்ளம் கொண்ட பாரதி என்ற கணவன் அமைகிறான். அதன் பின் அவள் வாழ்க்கையும் பாரதி என்ற கணவனின் வாழ்க்கையும் எவ்வாறு பயணிக்கிறது இவர்களின் வாழ்வில் அஞ்சலி, வெண்பா ஆகியோரால் வரவிருக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து, இந்த கதை நகர்கின்றது.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • அருண் பிரசாத் - பாரதி
    • நல்ல உள்ளம் கொண்டவன் இவனுக்கு அழகை விட பாசம் தான் பெரியது என நினைப்பவன். கண்ணம்மாவின் கணவன்.
  • ரோஷினி ஹரிப்ரியன் (2019-2021) → வினுஷா தேவி - கண்ணம்மா பாரதி
    • பாரதியின் மனைவி. அனைவருக்கும் உதவும் நல்ல குணம் கொண்டவள். சற்று கருத்த நிறம் உள்ளவள் என்பதால் சமுதாயத்தில் சில விமர்சனங்களை சந்திக்கிறாள்.
  • ரக்ஷா ஷ்யாம் (2021) - சௌந்தர்ய லட்சுமி
  • லிஷா ராஜ்குமார் - ஹேமா பாரதி
  • ஃபரினா ஆசாத் - வெண்பா
    • பாரதியை கல்லூரிக் காலம் முதல் காதலிப்பவள், பாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து பாரதியை மறுமணம் செய்ய சதி செய்பவள்.
  • கண்மணி மனோகரன் (சுவீட்டி) / அருள்ஜோதி ஆரோக்கியராஜ் - அஞ்சலி
    • வெள்ளை நிறம் உடையவள், கண்ணம்மாவின் மாற்றான் தாய் சகோதரி. புறத்தோற்றம் தான் ஒரு பெண்ணுக்கு அழகு என்ற எண்ணம் கொண்டவள்.
  • அகிலன் (2019-2021) → உகேஷ் ராஜேந்திரன் - அகிலன்
    • அஞ்சலியின் கணவன், சௌந்தர்யாவின் இளைய மகன்.

பாரதி குடும்பத்தினர்

  • ரூபா ஸ்ரீ - சௌந்தர்யா
    • அகிலனுக்கும் பாரதிக்கும் தாய், தனக்கு ஒரு அழகனா மருமகள் தான் வேண்டும் என்று நினைப்பவர்.
  • ரிஷி - வேணு கோபாலகிருஷ்ணன்
    • அகிலன், பாரதி, சுருதியின் தந்தை.
  • காவியா - அறிவுமணி
    • பாரதி, அகிலன், சுருதி ஆகியோர்க்கு சிற்றப்பன் மகள், தங்கை.
  • ஸ்ருதி சண்முக பிரியன் - சுருதி
    • சௌந்தர்யாவின் மகள், பாரதிக்கும் அகிலனுக்கும் சகோதரி.
  • தனுஸ்ரீ - யாழினி
    • ஸ்ருதியின் மகள் .

கண்ணம்மா/அஞ்சலி குடும்பத்தினர்

  • வெங்கட் - சண்முகம்
    • கண்ணம்மாவுக்கும் அஞ்சலிக்கும் தந்தை.
  • செந்தில்குமாரி - பாக்யலட்சுமி
    • அஞ்சலியின் தாய், கண்ணம்மாவின் மாற்றான் தாய்.
  • ராஜ்குமார் மனோகரன் - செல்வ கணபதி
    • பாக்யலட்சுமியின் சகோதரன்.
  • விஜயலக்ஷ்மி - அன்புக்கரசி
    • பாக்கியலட்சுமிக்கும் செல்வகணபதிக்கும் தாய்.

துணை கதாபாத்திரங்கள்

  • உமா ராணி - செண்பகவல்லி
  • ராஜா ஜெகன்மோகன் - வருண்
  • கண்ணம்மாவுடன் பள்ளியில் படித்தவன்
  • ரேவதி சங்கர் - காயத்ரி
  • யோகி - மாயாண்டி
  • சுபகீதா - நிர்மலா
  • ஷெரின் ஜானு - துளசி
  • ஸ்ரீமான் -
  • பாலாஜி - பாபு

சிறப்புத் தோற்றம்

  • சினேகன் (அத்தியாயம்: 1)
  • தீபா சங்கர் -
    • கண்ணம்மாவின் தாய் (அத்தியாயம்: 1)
  • சாந்தி மணி (அத்தியாயம்: 3)
Remove ads

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

சிறப்புத் தொடர்

இந்த தொடரின் கதைமாந்தர்கள் ஐந்து நாட்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் தோன்றும்படி கதை அமைக்கப்பட்டது. பாரதி, கண்ணம்மா, அகிலன், அஞ்சலி ஆகிய கதாப்பாத்திரங்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினருடன் இக்காட்சிகளில் இடம்பெற்றனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads