பரமசிவன் (திரைப்படம்)
பி. வாசு இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரமசிவன் (Paramasivan) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அஜித் குமார், லைலா, நாசர், பிரகாஷ்ராஜ், விவேக் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2006 சனவரி 14 பொங்கல் அன்று வெளியானது.[1][2]
Remove ads
கதைச் சுருக்கம்
இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியாவில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது - இங்கே முதலீடு செய்வது மிகவும் ஆபத்தான விஷயம் என்ற எண்ணத்தை ஏற்படுத்த தமிழகத்தில் தங்களது தீவிரவாதச் செயல்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள் தீவிரவாதிகள். இவர்களுக்கு காவல் துறையைச் சேர்ந்த சிலரே அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். இந்தத் தீவிரவாதிகளை ஒடுக்கும் பொறுப்பு போலீஸ் உயர் அதிகாரியான பிரகாஷ்ராஜிடம் ஒப்படைக்கப்படுகிறது. நேர்மையான வழியில் தீவிரவாதிகளை அடக்க முற்பட்டால் தன் துறையைச் சேர்ந்தவர்களே அதற்கு இடைஞ்சலாக இருப்பார்கள் என்று கருதும் பிரகாஷ்ராஜ் இதற்காக தூக்கு தண்டனை கைதியான அஜித்தை தேர்ந்தெடுக்கிறார்.
அஜித்திற்கு ஏன் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன பிளாஷ் பேக் - நேர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்த தன் தந்தை ராஜேஷையும் தன் தங்கையையும் தீவிரவாதிகளுக்கு உதவும் சில காவல்துறை அதிகாரிகள் கொன்றுவிட்டதை அறிந்து கொள்ளும் அஜித் அந்த அதிகாரிகள் அனைவரையும் கொன்று குவிக்கிறார்.. அதனால்தான் அவருக்க் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் பிரகாஷ்ராஜ் அஜித்தை சாமர்தியமாக தன்னுடைய உயர் அதிகாரியின் துணையுடன் தப்பிக்க வைக்கிறார். தான் போட்ட திட்டம் நல்லபடியாக முடிந்தவுடன் அஜித்தை தானே கொன்று விடுவதாக தன் உயர் அதிகாரியிடம் கூறுகிறார் பிரகாஷ்ராஜ்.
ஊட்டியில் பிரகாஷ்ராஜுக்கு சொந்தமான இடத்தில் தங்கும் அஜித் பிரகாஷ்ராஜ் கூறும் அனைத்து வேலைகளையும் முடிக்கிறார். இதற்கிடையே ராசியில்லாத பெண் என்று அனைவராலும் முத்திரைக் குத்தப்பட்ட லைலாவுடன் காதல். ஒருவழியாக பிரகாஷ்ராஜ் சொன்னபடி தீவிரவாதிகள் அனைவரையும் வெற்றிகரமாக அஜித் தீர்த்து கட்டிவிட்டு லைலாவுடன் செட்டில் ஆகலாம் என்று நினைக்கிற வேளையில் அவர் தலையில் துப்பாக்கியை வைக்கிறார் பிரகாஷ்ராஜ். அதிர்ந்து போகிறார்கள் லைலாவும் அஜித்தும். அஜித்தின் நிலை என்ன என்பதுதான் படத்தின் முடிவு.
Remove ads
நடிகர்கள்
- அஜித் குமார் - சுப்பிரமணிய சிவா / பரமசிவன் / ஈஸ்வரன்
- லைலா - மலர்
- விவேக் - அக்னிபுத்திரன்
- பிரகாஷ் ராஜ் - 'நெத்தியடி' நந்தகுமார் காவலர்
- ஜெயராம் - சி. பி. ஐ அதிகாரி 'நாயர்'.
- நாசர்
- கோட்டா சீனிவாச ராவ் - கதிர் வேதி சாமியார்
- ராஜேஷ் - S.I கணபதி/பரமசிவனின் அப்பா
- சந்தான பாரதி - மலரின் அப்பா
- அவினாஷ் - D.G.P ராஜ சேகர்
- மயில்சாமி
- சத்யன்
- சீதா-பரமசிவனின் அம்மா
- ஐசுவரியா - மலரின் சித்தி
- கே. பி. ஏ. சி லலிதா
- ரகசியா - 'ஆச தோச ' பாடலில் சிறப்புத் தோற்றம்
Remove ads
பாடல்கள்
விமர்சனம்
ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "அம்மா பாசத்தி்ல் தவித்துக் குமறுவதிலும், ஆக்ஷசன் காட்சிகளில் துடித்து உறுமுவதிலும் ஸ்கோர் பண்ணுகிறார் அஜீத். என்றாலும் அவர் கேரக்டருக்கான கனம் திரைக்கதையில் இல்லை. ரிஸ்க் எடுத்துப் பண்ணியிருக்கும் அஜீத்தின் பைக் சாகஸங்களுக்கு மட்டும் ஒரு சபாஷ் போடலாம்" என்று எழுதி 37100 மதிப்பெண்களை வழங்கினர்.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
