பிரம்மதேசம் (விழுப்புரம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரம்மதேசம், தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் வட்டத்திற்கு (தாலுக்கா) உட்பட்ட கிராம பஞ்சயத்தாகும். பிரம்மதேசம் மாநில நெடுஞ்சாலை SH -134ன் மூலம் தாலுக்கா தலைமையான திண்டிவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிறு நகரமான திண்டிவனம் இங்கிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மரக்காணம் ஊராட்சி ஒன்றியம் இங்கிருந்து சுமார் 18 கி.மீ தூரத்தில் உள்ளது.
பிரம்மதேசம் கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் தொகுதிக்கு உட்பட்ட 56 கிராம பஞ்சயத்துகளில் ஒன்றாகும்.
பிரம்மதேசத்தின் கிராம குறியீட்டெண் 10 ஆகும். இது மரக்காணம் தொகுதியின் ( தொகுதி குறியீட்டெண்:12 ) கீழ் இடம் பெறும்.[3]
இங்குள்ள பிரம்மபுரீசுவர் கோயில், பாதலீசுவரர் கோயில் ஆகிய இரண்டும் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தொல்லியல் நினைவுச்சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[4]
Remove ads
சொல்லிலக்கணம்
பிரம்மதேசம் என்றும் பிரம்ஹதேசம் என்றும் இந்த கிராமம் அழைக்கப்படுகின்றது. பிரம்மதேசம் என்றால் பிரம்ம தேவனின் தேசம் என்று பொருளாகும். தமிழ்நாட்டில் பிரம்மதேசம் என்ற பெயரை இந்த கிராமம் அல்லது இரு வேறு கிராமங்கள் பகிர்ந்து கொள்கின்றன. அவற்றுள் ஒன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ளது. மற்றொன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யார் வட்டத்தில் அமைந்துள்ளது.[5]
பொருளாதாரம்
இங்கு இருக்கும் பெறும்பாலான மக்கள் வேளாண்மையையே (பயிர்த்தொழிலையே) தங்கள் வாழ்க்கைத் தொழிலாக கொண்டுள்ளனர். நெல், நிலக்கடலை (மணிலாக் கொட்டை), கரும்பு, சவுக்கை, பருத்தி, தர்பூசணி மற்றும் சில பருப்பு வகைகளை இங்கு பயிர்செய்கின்றனர். கிழமை (வாரம்) ஒரு முறை (புதன் கிழமை) இக்கிராமத்தில் தொன்றுதொட்டு பல ஆண்டுகளாக உழவர் சந்தை நடைபெறுகின்றது. இச்சந்தையில் அருகில் உள்ள கிராமங்களில் விளைந்த புதிய பச்சை காய்கறிகள், கைவினை பொருள்கள் விற்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாது இச்சந்தை, சுற்றி உள்ள 10 -15 கிராமம்களுக்கு முக்கிய ஆடுமாடுகள் கொடுக்கல்வாங்கல் (வர்த்தக) மையமாக திகழ்கின்றது.[6]
Remove ads
பொதுமக்கள் சேவை
அஞ்சல் அலுவலகம்
இந்திய அஞ்சல் துறை இக்கிராமத்தில் தனது சார்நிலை அலுவலகத்தை இயக்குகின்றது . இந்த சார்நிலை அலுவலகம் திண்டிவனம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் கீழ் இயங்குகின்றது. இக்கிராமம் அஞ்சல் குறியீட்டெண் 604301 -த்தை அருகில் உள்ள 11 கிராமம்களான அடவல்லிக்குத்தன், அலங்குப்பம், கீழ்சிவிரி, கொளத்தூர், முன்னூர், நகர், ஒமிப்பேர், பெருமுக்கல், சிறுவாடி, வடநெற்குனம், வைடப்பக்கம் பகிர்ந்து கொள்கின்றது.[7]
காவல் நிலையம்

சட்ட ஒழுங்கை நிலைநாட்ட பிரம்மதேச காவல் நிலையம் சார்நிலை காவல்துறை ஆய்வாளர் கீழ் இயங்குகின்றது. நாணல்மேடு, ராஜாம்பாளையம் மற்றும் வெள்ளைகுளம் (வெள்ளகுளம்) ஆகிய கிராமங்கள் பிரம்மதேசம் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[8]
வங்கி
இந்தியாவின் நீண்ட கால வங்கியான இந்தியன் வங்கி தனது கிளை அலுவலகத்தை இங்குள்ள அ.வ.ச.வ மண்டபத்தில் இயக்குகின்றது.[9]
கல்வி
பிரம்மதேசம் மற்றும் அருகில் உள்ள கிராமம்களான ராஜாம்பாலயம், வன்னிபேர், ஏந்தூர் போன்ற கிராமங்களில் உள்ள மாணவர்கள் கல்வி கற்கப்பதற்காக தமிழக அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை நிறுவியுள்ளது. [10][11] அரசு பள்ளிகள் அல்லது சில தனியார் பள்ளிகள் இயக்குகின்றன.
போக்குவரத்து
மாநில நெடுஞ்சாலையான SH -134 திண்டிவனம்-மரக்காணம் மையப்பகுதியில் பிரம்மதேசம் அமைந்துள்ளதால் அருகில் உள்ள முக்கிய நகரங்களான புதுவை (சுமார் 30 கி.மீ) மற்றும் சென்னை (சுமார் 150 கி.மீ)உடன் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் போக்குவரத்து துறையால் இயக்கப்படும் பின்வருமாறு:
இப்பகுதியில் அரசுப் பேருந்துகள் தவிர சில தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Remove ads
அருகில் உள்ள முக்கிய இடங்கள்
- திண்டிவனம்
- சென்னை
- மரக்காணம்
- கல்பாக்கம்
- புதுச்சேரி
- முருக்கேரி
- நல்லாளம்
- சூணாம்பேடு
- கடப்பக்கம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads