பிரம்மன் கோயில்கள்

From Wikipedia, the free encyclopedia

பிரம்மன் கோயில்கள்
Remove ads

இந்து சமயத்தில் படைக்கும் கடவுளான பிரம்மனுக்கு கோயில்கள் காண்பது அரிது.

Thumb
நான்முக பிரம்மா

தொன்ம கதை

பிரம்மனுக்கு கோயில்கள் அரிதாகக் காணப்படுவதற்கு இந்து புராணங்களில் பின்வரும் காரணம் தரப்பட்டுள்ளது. படைக்கும் கடவுளாகிய நான்முக பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளாகிய திருமாலுக்கும், தங்களில் யார் பெரியவர் விவாதம் உண்டாகி, சிவபெருமானிடம் சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக் கூற திருமால் வராக அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் அன்னப் பறவையாக உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் பிரம்மன் முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம் ஒரு பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். சிவனின் முடியை, பிரம்மன் கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் ஆலயம் மற்றும் பூசைகள் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். எனவே பிரம்மனுக்கு அரிதாகவே கோயில்கள் உள்ளன.

Remove ads

இந்தியாவில் பிரம்மன் கோயில்கள்

பிரம்மாவுக்கு இந்தியாவில் பன்னிரண்டு கோயில்கள் உள்ளன.

  • இராஜஸ்தான் மாநிலத்தில் புஷ்கர் ஏரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான புஷ்கர் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை.
  • குசராத் மாநிலத்தில், சோமநாதபுரம் கோயில் அருகில், இரண்யநதி- கபிலநதி-சரசுவதி நதி ஆகிய மூன்று ஆறுகள் கூடும் இடத்தில், கடற்கரையில் அமைந்திருந்த பிரம்மன கோயில், தற்போது கடலில் மூழ்கி விட்ட்து.
  • தமிழ்நாட்டில், கும்பகோணம் நகரில் சரசுவதி-காயத்ரீ சமேதராக பிரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மட்டும் தான் இந்தியாவில், பிரம்மனுக்கு தினசரி பூசை செய்யப்படுகிறது. இதனை ’பிர்மன் கோயில்' என்று உள்ளூரில் கூறுவர்.
  • தமிழ்நாட்டில் ஒசூர் நகரில் பிரம்மன் மலையில் பிரம்மனுக்கு கோயில் அமைத்து வழிபாடு நடக்கிறது.
  • குருவன் என்ற குருவனம்-நாபிக் கமல தீர்த்தம் என்ற பெயரில் பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் பிரம்மனுக்கு பூசை இல்லை.
  • பீகார் மாநிலம், கயாவிற்கு அருகில் பிரம்மயோனிகிரி எனுமிட்த்தில் ’கயாஸ்நீத்’ என்ற பெயரில் பிரம்மனுக்கு கோயில் உள்ளது. ஆனால் பூசை இல்லை.
  • குசராத் மாநிலத்தில் நருமதை ஆற்றாங்கரையில் பிரம்மசீலா எனும் இடத்தில் உள்ள பிரம்மன் கோயிலுக்கு பூசை இல்லை.
  • தமிழ்நாடு,திருச்சிக்கு அருகில் திருப்பட்டூர் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது. தினசரி பூசை உண்டு.
  • தமிழ்நாடு, நாகப்பட்டினம், நாகப்ஷேத்திரம் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
  • மகாராட்டிர மாநிலத்தில், பேக்வா எனுமிடத்தில் பிருத்தாக் என்ற பிரம்மன் கோயில் உள்ளது.
  • இராஜ்குரூக் பகுதியில் வைபார் கிரி எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
  • பேக்வா மாவட்டத்தில், பிருத்தாக் எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
  • வசந்த காட் எனும் ஊரில் பிரம்மன் கோயில் உள்ளது.
  • கோமக்தக் என்ற பகுதியில் காரம்லி எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
  • ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமுடி என்னும் ஊரில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் பிரம்மா கோயில் உள்ளது.
Remove ads

வெளிநாட்டு பிரம்மன் கோயில்கள்


ஆதார நூல்

  • மேற்கு வங்கத்தை சார்ந்த பரசுராம் ராஜ் எழுதிய “பரம் ஹொதிஹி” எனும் நூல்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads