பிரான்க்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரான்க்சு (The Bronx) ஐக்கிய அமெரிக்க மாநிலமான நியூயார்க் மாநிலத்திலுள்ள நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் மிகவும் வடக்கில் உள்ள பரோவாகும். பிரான்க்சு கவுன்ட்டியுடன் ஒன்றாக உள்ள பிரான்க்சு பரோ நியூயார்க் மாநிலத்தின் 62 கவுன்ட்டிகளில் கடைசியாக நிறுவப்பட்டதாகும். மன்ஹாட்டன் மற்றும் குயின்சு பரோக்களின் வடக்கேயும் வெஸ்ட்செஸ்டர் கவுன்ட்டிக்கு தெற்கிலும் அமைந்துள்ள பிரான்க்சு ஐக்கிய அமெரிக்காவின் தொடர்நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரே பரோ ஆகும். (மற்றவை தீவுகளில் அமைந்துள்ளன). பிரான்க்சின் மக்கள்தொகை 2010ஆம் கணக்கெடுப்பின்படி 1,385,108 ஆகும். இது 2013இல் 1,418,733 ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.[1] பிரான்க்சின் நிலப்பரப்பு 42 சதுர மைல்கள் (109 km2) ஆகும். ஐந்து பரோக்களில் மக்கள்தொகையில் நான்காவதாக உள்ள பிரான்க்சு மக்கள்தொகை அடர்த்தியில் மூன்றாவதாக உள்ளது.[2]
நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம் | ||||
ஆட்பகுதி | மக்கள்தொகை | நிலப் பரப்பளவு | ||
பரோ | கவுன்ட்டி | 1 சூலை 2013 மதிப்பீடு | சதுர மைல்கள் | சதுர கிமீ |
மன்ஹாட்டன் | நியூ யார்க் | 1,626,159 | 23 | 59 |
பிரான்க்சு | பிரான்க்சு | 1,418,733 | 42 | 109 |
புருக்ளின் | கிங்சு | 2,592,149 | 71 | 183 |
குயின்சு | குயின்சு | 2,296,175 | 109 | 283 |
இசுட்டேட்டன் தீவு | ரிச்மாண்ட் | 472,621 | 58 | 151 |
8,405,837 | 303 | 786 | ||
19,651,127 | 47,214 | 122,284 | ||
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[3][2][4] |
Remove ads
மேற்சான்றுகள்
பிற வலைத்தளங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads