குயின்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
குயின்சு (Queens) ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் மிகக் கிழக்கிலும் பரப்பளவில் மிகப் பெரியதுமான பரோ இது ஆகும். இது நீள் தீவின் மேற்கு முனையில் புரூக்ளின் பரோவிற்கு அடுத்ததாக உள்ளது. 1899இலிருந்து குயின்சு கவுன்ட்டி உடன் ஒரே நிலப்பரப்பை பகிர்ந்துள்ள குயின்சு பரோவில் 2013 கணக்கெடுப்பின்படி 2.3 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்; இவர்களில் 48% வெளிநாட்டவர் ஆவர்[1]. நியூயார்க் நகரத்தின் இரண்டாவது மக்கள்தொகை உள்ள பரோவாக, புரூக்ளினை அடுத்து, விளங்குகிறது. நியூயார்க் மாநிலத்திலும் மிகுந்த மக்கள்தொகை உடைய கவுன்ட்டிகளில் இரண்டாவதாக விளங்குகிறது. மக்களடர்த்தியில் நியூயார்க்கின் பரோக்களில் நான்காவதாக உள்ளது.[2] உலகின் ஊரகப்பகுதிகளில் மிகவும் பல்லினப் பரவலுள்ள நிலப்பகுதியாக உள்ளது.[3][4]
குயின்சின் மக்களடர்த்தி நிறைந்த மேற்கு, நடுமைப் பகுதிகளில் அடுக்குமாடிக் கட்டிடங்களும் நாசோ கவுன்ட்டியை அடுத்த கிழக்குப் பகுதியில் தனி பங்களாக்களும் பொருளாதாரப் பன்முகத்தைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.[5][6] நியூயார்க்கின் இந்த பரோவில்தான் பொருளியல்நிலை பன்முகப்பட்டதாக உள்ளது.[7]
நியூயார்க்கின் மூன்று வானூர்தி நிலையங்களில் இரண்டு இந்த பரோவில்தான் அமைந்துள்ளன: ஜெஎஃப்கே பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் லாகோர்தியா வானூர்தி நிலையம். இந்த உலகின் மிகவும் போக்குவரத்துமிக்க நிலையங்கள் உள்ளதால் குயின்சு மீதுள்ள வான்பரப்பு நாட்டிலேயே மிகவும் நெருக்கடி மிக்கதாக உள்ளது. இங்குள்ள நியூயார்க் மெட்சு அடிப்பந்தாட்ட அணியின் தாயக அரங்கமும் யூ. எசு. டென்னிசுப் போட்டிகள் நடக்கும் பில்லி ஜீன் கிங் தேசிய டென்னிசு மையமும் உள்ள பிளஷிங் மெடோசு பூங்கா இங்குள்ளது.
நியூயார்க் மாநிலத்தின் 12 கவுன்ட்டிகளில் ஒன்றாக 1683ஆம் ஆண்டு குயின்சு நிறுவப்பட்டது. அச்சமயத்தில் இங்கிலாந்து, இசுக்காட்லாந்து மற்றும் அயர்லாந்தின் அரசியாக இருந்த போர்த்துக்கேய இளவரசி கேத்தரினின் நினைவாக குயின்சு எனப் பெயரிடப்பட்டது.[8][9] 1898இல் நியூயார்க் நகரம் ஒன்றிணைக்கப்பட்டபோது குயின்சு அதன் பரோக்களில் ஒன்றாயிற்று. 1683இலிருந்து 1899 வரை, தற்போதைய நாசோ கவுன்ட்டி குயின்சு கவுன்ட்டியின் அங்கமாக இருந்தது.
நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம் | ||||
ஆட்பகுதி | மக்கள்தொகை | நிலப் பரப்பளவு | ||
பரோ | கவுன்ட்டி | 1 சூலை 2013 மதிப்பீடு | சதுர மைல்கள் | சதுர கிமீ |
மன்ஹாட்டன் | நியூ யார்க் | 1,626,159 | 23 | 59 |
பிரான்க்சு | பிரான்க்சு | 1,418,733 | 42 | 109 |
புருக்ளின் | கிங்சு | 2,592,149 | 71 | 183 |
குயின்சு | குயின்சு | 2,296,175 | 109 | 283 |
இசுட்டேட்டன் தீவு | ரிச்மாண்ட் | 472,621 | 58 | 151 |
8,405,837 | 303 | 786 | ||
19,651,127 | 47,214 | 122,284 | ||
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[10][11][12] |
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads