புரூக்ளின்

From Wikipedia, the free encyclopedia

புரூக்ளின்
Remove ads

புரூக்ளின் (Brooklyn, /ˈbrʊklɪn/) ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ஐந்து பரோக்களில் மிகக் கூடுதலான மக்கள்தொகை கொண்ட பரோவாகும்; இங்கு ஏறத்தாழ 2.6 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.[1]
பரப்பளவில் இது நியூயார்க் நகரத்தின் இரண்டாவது பெரிய பரோவாகும். 1896 இலிருந்து புரூக்ளினின் எல்லைகளும் கிங்சு கவுன்ட்டியின் எல்லைகளும் ஒன்றாக உள்ளன. கிங்சு கவுன்ட்டி நியூயார்க் மாநிலத்தின் அனைத்துக் கவுன்ட்டிகளிலும் மிகுந்த மக்கள்தொகை உடைய கவுன்ட்டியாக விளங்குகிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அனைத்து கவுன்ட்டிகளிலும் மக்கள்நெருக்க மிக்கதாக நியூயார்க் கவுன்ட்டியை (மன்ஹாட்டன்) அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளது.[2]

விரைவான உண்மைகள் புரூக்ளின் டச்சு: Breukelenபுரூக்ளின், நியூயார்க், நாடு ...

இங்கு பல இன மக்கள் தனித்தனி பகுதிகளில் (என்கிளேவ்) குடியேறியுள்ளனர். இதனையொட்டியே புரூக்ளினின் குறிக்கோளுரையாக Eendraght Maeckt Maght (ஒற்றுமையே வலிமை) என உள்ளது. இக்குறிக்கோளுரை பரோவின் சின்னத்திலும் கொடிகளிலும் காணப்படுகிறது.[3] புரூக்ளினின் அலுவல்முறை நிறங்கள் நீலமும் பொன்வண்ணமும் ஆகும்.[4]

நியூயார்க்கின் ஐந்து பரோக்கள் கண்ணோட்டம்
ஆட்பகுதி மக்கள்தொகை நிலப் பரப்பளவு
பரோகவுன்ட்டி1 சூலை 2013
மதிப்பீடு
சதுர
மைல்கள்
சதுர
கிமீ
மன்ஹாட்டன்நியூ யார்க்1,626,1592359
பிரான்க்சுபிரான்க்சு1,418,73342109
புருக்ளின்கிங்சு2,592,14971183
குயின்சுகுயின்சு2,296,175109283
இசுட்டேட்டன் தீவுரிச்மாண்ட்472,62158151
8,405,837303786
19,651,12747,214122,284
மூலம்: ஐக்கிய அமெரிக்க கணக்கெடுப்பு வாரியம்[5][6][7]
Remove ads

புவியியல்

புரூக்ளின் நீள் தீவின் மேற்கு முனையில் அமைந்துள்ளது. இதனை மேன்காட்டனிடமிருந்து கிழக்கு ஆறு பிரிக்கிறது. புரூக்ளினின் ஒரே நிலத் தொடர்பு குயின்சுடன் உள்ளது. மற்ற பக்கங்களில் நீரால் சூழப்பட்டுள்ளது.

வரலாறு

புரூக்ளின் நெதர்லாந்திலுள்ள "புரெகெலன்" (Breukelen) என்ற நகரையொட்டி பெயரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் முதன்முதலாக டச்சு மக்களே குடியேறினர். அவர்களுக்கு முன்னதாக அங்கு வாழ்ந்திருந்த அமெரிக்க தொல்குடியினர் இப்பகுதியை லெனேப் என அழைத்தனர். புதிய நெதர்லாந்து குடியேற்றத்தை உருவாக்க முனைந்த டச்சுக்காரர்கள் 1634இல் இங்கு குடியேறினர். புரூக்ளின் தனி நகரமாக வளர்ந்திருந்த நிலையில் 1898இல் பெரிய நியூயார்க் நகரத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட கருத்து வாக்கெடுப்பின்படி நியூயார்க் நகரத்துடன் இணைந்தது. இன்று பல பண்பாடுகளைக் கொண்ட பல்வேறு இனக் குழுக்கள் இங்கு ஒற்றுமையுடன் வாழ்கின்றனர்.

Remove ads

சிறப்புக் கூறுகள்

இங்குள்ள புரூக்ளின் பாலம் மிகவும் புகழ்பெற்றது. புரூக்ளினையும் மேன்காட்டனையும் இணைக்கும் இது கிழக்கு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இருபுறமும் நடைமேடையுடன் உள்ள இந்தப் பாலத்தில் மேன்காட்டன் மற்றும் புரூக்ளினின் அழகியத் தோற்றத்தைக் கண்டவாறே நடப்பதற்கு பல சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். நியூயார்க் நகரத்தின் மிகப்பெரும் பாலம் புரூக்ளினையும் இசுட்டேட்டன் தீவையும் இணைக்கிறது.

மேற்சான்றுகள்

பிற தளங்களில்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads