பிளைத் நெட்டைக்காலி

From Wikipedia, the free encyclopedia

பிளைத் நெட்டைக்காலி
Remove ads

பிளைத் நெட்டைக்காலி (Blyth's pipit)(ஆந்தசு காடில்விசுகி) என்பது மங்கோலியா மற்றும் சீனா, திபெத் மற்றும் இந்தியாவின் அண்டை பகுதிகளில் இனப்பெருக்கம் செய்யும் ஒரு நடுத்தர அளவிலான குருவியாகும். இது தெற்காசியாவில் திறந்த தாழ் நிலப்பகுதிகளுக்கு நகரும் நீண்ட தூரம் புலம்பெயரும் பறவையாகும். இது மேற்கு ஐரோப்பாவிற்கு மிகவும் அரிதான வேக்ரண்ட் ஆகும்.

விரைவான உண்மைகள் பிளைத் நெட்டைக்காலி, காப்பு நிலை ...
Thumb
Thumb
குளிர்கால இறகுகளுடன்.

பிளைத் நெட்டைக்காலி பெரிய நெட்டைக்காலியாகும். ஆனால் இவை தரையில் காணப்படும் வேறுபடுத்தியறிய இயலா சிற்றினமாகும். இதன் மேல் பகுதி பழுப்பு நிறத்துடன் கீழே வெளிர் நிறமாகக் காணப்படும். இது ரிச்சர்டு நெட்டைக்காலி போன்று காணப்படும். ஆனால் சற்று சிறியது, குறுகிய கால்கள் மற்றும் குறுகிய அடர் அலகுடன், வலுவானது பறத்தலையும் ரிச்சர்டு நெட்டைக்காலியினை விடத் தெளிவான அழைப்பினை உடையது.

தெற்காசியாவில், குளிர்காலத்தில், ரிச்சர்டு நெட்டைக்காலி உட்பட, உட்பட இப்பகுதியில் வசிக்கும் மற்ற பெரிய நெட்டைக்காலியிலிருந்து இதை வேறுபடுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும். இந்த சிற்றினம் பூச்சி உண்ணி வகையினைச் சார்ந்தது.

இந்த பறவைக்கு ஆங்கிலேய விலங்கியல் நிபுணர் எட்வர்ட் பிளைத் பெயரிடப்பட்டது. ஆந்தசு என்ற பேரினப் பெயர் புல்வெளிகளின் சிறிய பறவையின் இலத்தீன் பெயர். குறிப்பிட்ட காடில்விசுகி என்பது போலந்து பிரபு மற்றும் கள இயற்கை ஆர்வலர் விக்டர் காடில்விசுகியை நினைவுகூருகிறது.[2]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads