பி. இராச்சையா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பசவையா இராச்சையா (Basavayya Rachaiah) (10 ஆகஸ்ட் 1922 - 14 பிப்ரவரி 2000[3] ) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும்[4] [5] கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.[6] இவர் 1977இல் கர்நாடகாவின் சாமராஜநகரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7] இவர் கேரளா, இமாச்சல பிரதேசத்தின் ஆளுநராக இருந்தார்.[8] [9] எஸ். நிஜலிங்கப்பா, பசப்பா தனப்பா ஜாட்டி, தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டில், இராமகிருஷ்ணா ஹெக்டே, சோ. ரா. பொம்மை ஆகிய முதலைமைச்சர்களின் தலைமையிலான கர்நாடக மாநில அமைச்சரவை உறுப்பினராக இருந்தார்.
இராச்சையா 1922இல் சாமராசநகரில் பிறந்தார். இவர், தொழிலில் வழக்கறிஞராக இருந்தார். இவருடைய மருமகன்களில் ஒருவரான பி. பி. நிங்கையா, ஜே. ஹெச். படேல் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தார். இராச்சையா 2000 இல் தனது 77 வயதில் இறந்தார்.[10]
Remove ads
மரபு

மாநிலத்திற்கு இவர் ஆற்றிய சேவைகளுக்காக, மைசூரில் சாயாஜிராவ் சாலையில் உள்ள ஒரு சாலைக்கு இராச்சையாவின் பெயரிடப்பட்டது.
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads