பீகாரி மொழிகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிகாரி மொழிகள் (Bihari languages) என்பது இந்தியாவிலுள்ள பீகாரில் பேசப்படும் மொழிகளை குறிக்கும். இம்மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை. இம்மொழிகள் முக்கியமாக இந்திய மாநிலங்களான பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசம் மற்றும் நேபாளத்தில் பேசப்படுகிறது.[1][2]
இந்த மொழிகளை பேசுபவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தபோதிலும், 'மைதிலி' மட்டுமே இந்தியாவில் அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றது, இது இந்திய அரசியலமைப்பின் 92 வது திருத்தத்தின் மூலம் அரசியலமைப்பு அந்தஸ்தை பெற்றது, 2003 ஆம் ஆண்டில் (2004 இல் அங்கீகாரம் பெற்றது). [3] மைதிலி மற்றும் போஜ்பூரி இரண்டும் நேபாளத்தில் அரசியலமைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளது.[4] பீகாரில், கல்வி மற்றும் உத்தியோகபூர்வ விஷயங்களுக்கு பயன்படுத்தப்படும் மொழி இந்தியாகும்.[5] இந்த மொழிகள் 1961 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தி உச்சரிப்பாகவே இருந்தன. இது மாநில மற்றும் தேசிய அரசியலில் இம்மொழிகள் ஆபத்தான நிலைமைகளை உருவாக்குகிறது.[6] 1950இல் சுதந்திரம் அடைந்த பிறகு பீகார் அதிகாரப்பூர்வ மொழிச் சட்டத்தில் இந்திமொழிக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. 1981 ல் பீகாரில் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த இந்தி அகற்றப்பட்டது[7]. உருது இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழியின் நிலையை பெற்றது.[சான்று தேவை]
Remove ads
மொழி பேசுபவர்கள்
பிகாரி மொழிகளை பேசுபபவர்கள் பற்றிய எண்ணிக்கை பற்றிய சரியான ஆதாரமின்மை காரணமாக கணக்கெடுப்பது மிகவும் கடினமாகும். நகர்ப்புற பிராந்தியத்தில் இந்த மொழியின் பெயரை இந்தி மொழியில் மொழி பெயர்த்துள்ளதாலும், அவர்கள் சாதாரண சூழல்களில் பயன்படுத்துவதாலும், அதைப்பற்றி தெரியாத காரணத்தினாலும். இந்த பிராந்தியத்தின் படித்த மற்றும் நகர்ப்புற மக்கள் தங்கள் மொழிக்கான பொதுவான பெயராக இந்தி என்று நம்புகின்றனர்[8].
பிகாரி குழுவில் சேர்க்கப்பட்ட சில முக்கிய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள்
பிகார் மொழியில் ஒருசில மொழிகளில் மைதிலி மொழி கலந்திருப்பதாகவும், மேலும் பிற பிகாரி மொழிகளுடன் ஒப்பிடுகையில் அது அண்டைமாநில மொழியான பெங்காலிக்கு மிகவும் ஒற்றுமைகள் இருப்பதைக் குறிப்பிடுகிறது
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்s
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads