அங்கிகா

From Wikipedia, the free encyclopedia

அங்கிகா
Remove ads

அங்கிகா (ஆங்கிலம்: Angika, இந்தி: अंगिका) மொழி இந்தியாவின் பீகார் , ஜார்கண்ட் , மேற்கு வங்காளம் மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் பேசப்பட்டும் இந்தோ ஈரானிய மொழி ஆகும்.இம்மொழி சற்றே வங்காள மொழியை ஒத்து இருக்கும். மகாபாரதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அங்க தேசம் மக்கள் பேசிய மொழி இதுவாகும்.[2][3]

விரைவான உண்மைகள் அங்கிகா Angika, நாடு(கள்) ...
Remove ads

நிலை

இந்திய அரசால் 8 ஆவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 அலுவல் மொழிகளுள் ஒன்றாக இது இல்லை.அதற்கான கோரிக்கை நிலுவையில் உள்ளது.[4]

எழுத்து

அங்கிகா மொழி தேவநாகரி எழுத்துவடிவில் எழுதப்படும். பழங்காலத்தில் அங்கா லிபி மற்றும் காய்தி போன்றவை புழக்கத்தில் இருந்தன.[5][6]

வேறு பெயர்கள்

இம்மொழி கீழே குறிப்பிடப்பட்டுள்ள வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.

  • அங்கி
  • சுர்ஜாபூரி
  • அங்கிகார்
  • செக்கா-சிக்கி
  • சாய்-ச்செள
  • பாகல்பூரி
  • செக்காரி
  • கேய்ல்-கேய்லி
  • தீதி

மொழி பேசுவோர்

கிழக்கு பீகார் காதிகார் , புர்னியா , கிசாங்காஜ் , மதேபுரா , சகர்சா , பாகல்பூர் , பங்கா , ஜாமுய் , முங்கர் , லகிசாராய் , பெங்குசாராய் மற்றும் சீக்புரா ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது. ஜார்கண்ட் சகப்காங்ஜ் , ஹோடா , டியோஹார் , பகுர் , டும்கா மற்றும் ஜம்ட்ரா ஆகிய மாவட்டங்களில் புழக்கத்தில் உள்ளது.

மேலும் , அங்கிகா மொழி பேசும் மக்கள் அதிக அளவு ஈரான் , அமெரிக்கா , இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய இடங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டனர்.

Remove ads

திரைப்படம்

இம்மொழியின் முதல் திரைப்படம் 27 ஏப்ரல் 2007 ஆம் ஆண்டு பீகாரின் லெஷ்மி திரையரங்கில் வெளியிடப்பட்டது. திரைப்படத்தின் பெயர் கஹாரியா வாலி போவ்ஜி பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் ஆகும்.அதன் பின் 2010-ல் அங் புத்ரா பரணிடப்பட்டது 2017-09-21 at the வந்தவழி இயந்திரம் எனும் திரைப்படம் வெளியானது.மேலும் கைசே சாந்தோ பிகுலா பிஸ்கரி கை எனும் திரைப்படம் வெளியாகப்போகிறது.

விக்கிப்பீடியாவில் அங்கிகா

விக்கிப்பீடியாவில் அங்கிகா மொழியைச் சேர்க்க வேண்டும் என ஓட்டெடுப்பு நடக்கிறது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads