மகதி மொழி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகதி மொழி, வட இந்தியாவின் பீகார் மாநிலத்தில், குறிப்பாக மகதப் பிரதேசத்தில் வட்டார வழக்கு மொழியாகப் பேசப்படுகிறது. இது பீகாரி மொழிகளில் ஒன்றாகும். இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மகதி மொழியை பீகார் மட்டுமின்றி சார்க்கண்டு மற்றும் வடமேற்கு மேற்கு வங்காள மாநிலங்களில் சில பகுதிகளில் பேச்சு மொழியாக உள்ளது.[9][10]மேலும் மகதி மொழியை நேபாளத்தின் தெராய் சமவெளிப் பகுதிகளிலும் பேச்சு மொழியாக பேசப்படுகிறது.[11]மகதி மொழியின் முன்னோடியே மாகதிப் பிராகிருதம் ஆகும்.[12]மகதி மொழிக்கு தேவநாகரி எழுத்துமுறையே பயன்படுத்தப்படுகிறது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மகதி மொழி, 12.7 மில்லியன் மக்களின் வட்டார வழக்கு மொழியாக உள்ளது.
Remove ads
வரலாறு
மகதி மொழியின் முன்னோடி மொழியே மாகதிப் பிராகிருதம் ஆகும். மகதி மொழி[13] தற்கால பீகார் மாநிலத்தில் இருந்த மகத இராச்சியத்தில் பேசப்பட்டது. மகதி பிராகிருதத்திலிருந்து தற்போதைய வடிவமான மகதி மொழி எப்போது மாற்றமடைந்தது என்பது குறித்து அறியப்படவில்லை. கிபி 8 முதல் 11வது நூற்றாண்டில் மகதி பிராகிருதத்திலிருந்து மகதி மொழி, அசாமிய மொழி, வங்காள மொழி, போஜ்புரி மொழி, மைதிலி மொழி மற்றும் ஒடியா மொழிகள் தோன்றியிருக்க வேண்டும் என மொழியியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.
12ஆம் நூற்றாண்டின் முடிவில் மத்தியகால இந்தோ-ஆரிய மொழியான அபபிரம்சம் மொழி, குஜராத்தி மொழி, மராத்தி மொழி, வங்காள மொழி, போஜ்புரி மொழி, அசாமி, ஒடியா, மைதிலி மொமிகள் மீது தாக்கம் செலுத்தியது.
மகதி மொழியின் பழைய எழுத்து முறையை கைதி மொழிக்கு பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் மகதி மொழியின் எழுத்து முறைக்கு தேவநாகரி பயன்பாட்டில் உள்ளது. 1881களில் இந்தி மொழி பீகார் மாநிலத்தில் பரவிய போது, பொதுமக்கள் உருது மொழியை அலுவல் மொழி பயன்பாட்டிலிருந்து நீக்கினர். 1950ஆம் ஆண்டிலிருந்து இந்தி மொழி பீகார் மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது[14]. இதனால் மகதி மொழியின் எழுத்து முறை பயன்பாட்டிலிருந்து தானாகவே நீங்கியது.
Remove ads
மகதி மொழி பேசப்படும் பகுதிகள்
தற்கால இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பட்னா மாவட்டம், நாலந்தா மாவட்டம், கயா மாவட்டம், ஜகானாபாத் மாவட்டம், அர்வல் மாவட்டம், அவுரங்காபாத் மாவட்டம், லக்கிசராய் மாவட்டம், ஷேக்புரா மாவட்டம் மற்றும் நவாதா மாவட்டங்களில் மகதி மொழி வட்டார வழக்கு மொழியாக பேசப்படுகிறது.
மகதி மொழி பேசும் மக்கள்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மகதி மொழியை 12.7 மில்லியன் மக்கள் வட்டார வழக்கு மொழியாகப் பேசுகின்றனர்.[4][5]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads