பீர்க்கன்கரணை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பீர்க்கன்கரணை (ஆங்கிலம்:Peerkankaranai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டததில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். இப்பகுதி சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள ஒரு வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்

3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

அமைவிடம்

பீர்க்கன்கரணை பகுதி மாவட்டத் தலைமையிடமான காஞ்சிபுரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இதனருகில் உள்ள தொடருந்து நிலையம், 2.5 கி.மீ. தொலைவில் உள்ள அ பெருங்களத்தூர் ஆகும். இதனருகில் வண்டலூர் 3 கி.மீ.; கிழக்கு தாம்பரம் 3.50 கி.மீ.; பழைய பெருங்களத்தூர் 2.40 கி.மீ. தொலைவில் உள்ளது.

பகுதியின் அமைப்பு

1.786 ச.கி.மீ. பரப்பும், 244 தெருக்களையும் கொண்ட இப்பகுதி தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 25,871 மக்கள்தொகை கொண்டது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 47.7% ஆகவுயர்ந்துள்ளது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 92% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 985 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13% மற்றும் 1% ஆக உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு கி.மீ. 4061 நபர் வீதம் வாழ்கின்றனர்.[4][5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads