கல்லுக்குருவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்லுக்குருவி (pied bush chat) என்பது குருவியளவு உள்ள ஒரு பறவையாகும். இது மேற்காசியா, நடு ஆசியா, இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது. இப்பறவை இணை இணையாகச் கிராமப் புறங்களில் சுற்றக்கூடியது.
Remove ads
விளக்கம்
இப்பறவைகளில் ஆண்பறவை நல்ல கறுப்பு நிறம் உடையதாகவும், அடித்தொண்டை, அடிவயிறு, இறக்கைப் பகுதிகளில் ஒளிரும் வெண் பட்டை உடையதாகவும் இருக்கும. பெண்பறவை மண் நிறம் கொண்டதாகவும், தொடைப் பகுதி துரு நிறம் கொண்டதாகவும் உள்ளது.
வாழ்க்கை
இப்பறவையின் இனப்பெருக்கக் காலம் பெரும்பாலும் பிப்பிரவரி முதல் ஆகத்து மாதம் வரையிருக்கும், ஆனால் மார்ச்சு சூன் மாதங்களுக்கிடையே உச்ச காலமாக இருக்கும். ஆண்பறவைகள் கிளை உச்சிகளில் இருந்துகொண்டு கீச்சென்ற குரலில் குயின்றுகொண்டு இருக்கும். இதன் குரலை இணைத்துள்ள ஒலிக்கோப்பின்வழி கேட்கலாம்.
இதன் கூடு பொந்துகளில் காய்ந்த புல் முதலானவற்றால் கட்டப்பெற்றிருக்கும். கூட்டில் 2-5 முட்டைகள் இடும்[2]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads