புத்திரகாமேஷ்டி யாகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புத்திரகாமேஷ்டி யாகம் (Putrakameshti (சமசுகிருதம்:|पुत्रकामेष्टि), இந்து சமயத்தில் குழந்தைப் பேறு வேண்டி செய்யப்படும் ஒரு வகை சிறப்பு வேள்வி ஆகும்.[1]இச்சடங்கு காம்ய கர்மங்களில் ஒன்றாகும்.

இதிகாசங்களில் புத்திரகாமேஷ்டி யாகம்
இராமாயணம் காவியத்தில் மூன்று பட்டத்து ராணிகள் கொண்ட அயோத்தி மன்னர் தசரதன் பல ஆண்டுகளாக குழந்தை பேறு இன்றி இருந்தார். குல குரு வசிட்டரின் ஆலோசனைப்படி, யசுர் வேத அறிஞரான முனிவர் ரிஷ்யசிருங்கரைக் கொண்டு மன்னர் தசரதன் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். யாகத்தின் முடிவில், வேள்வித் தீயில் தோன்றிய அக்னி தேவன் தசரதனிடம் பாயசப் பாத்திரத்தை வழங்கினார். அப்பாயசத்தை பட்டத்து இராணிகளான கோசலை, சுமித்திரை மற்றும் கைகேயி ஆகியவர் புசித்தனர். மீதமிருந்த பாயசத்தை சுமித்திரை உண்டாள். இதனால் கோசலைக்கு இராமன், சுமித்திரைக்கு இலட்சுமணன் மற்றும் சத்துருக்கன் எனும் இரட்டையரும், கைகேயிக்கு பரதன் பிறந்தனர்.[2]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads