புருசியா

From Wikipedia, the free encyclopedia

புருசியா
Remove ads

பிரசியா அல்லது புருசியா (Prussia, German: Preußen, போலிய: Prusy, இலித்துவானியம்: Prūsija) வடக்கு ஐரோப்பாவில் இருந்த ஓர் நிலப்பகுதியாகும். இது ஜெர்மனியின் அங்கமாக சில காலமும் போலந்தின் அங்கமாக சிலகாலமும் இருந்துள்ளது. "புருசியா" என்ற சொல் கடந்த காலத்திலும் தற்காலத்திலும் பல்வேறு வெவ்வேறான பொருள்களை வழங்குகின்றது:

விரைவான உண்மைகள் புருசியாPreußen, தலைநகரம் ...

1934இல் நாட்சிகள் இந்நிலப்பகுதிகளுக்கு புருசியா என்ற பெயரைப் பயன்படுத்துவதை நிறுத்தினர். 1947இல் நேசநாடுகள் புருசியாவின் நாடு நிலையை இரத்து செய்து அதன் நிலப்பகுதிகளை தங்களுக்குள்ளும் புதியதாக உருவான இடாய்ச்சுலாந்தின் மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுத்தன.[2][3] இன்று இப்பெயர் வரலாறு, புவியியல், பண்பாட்டுப் பயன்பாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது.

புருசியா என்ற பெயர் பால்டிக் பகுதியில் வாழ்ந்த போருசி அல்லது பிரசி மக்களுடையதாகத் தோன்றியது. இவர்கள் பழைய புருசிய மொழி பேசிவந்தனர். இவர்களது சிற்றரரசு போலந்து அரசருக்கு 1660 வரை கப்பம் கட்டி வந்தது. பின்னர் 1772 வரை அரச புருசியா போலந்தின் அங்கமாயிற்று. பிந்தைய 18ஆம் நூற்றாண்டிலும் துவக்க 19ஆம் நூற்றாண்டிலும் இடாய்ச்சு மொழி பேசும் புருசியர்கள் தங்களை செருமனியின் அங்கமாக கருதத் தொடங்கினர். மேலும் அவர்கள் புருசியர்களின் வாழ்க்கைமுறை மிகவும் குறிப்பிடத்தக்கதாக்க் கருதினர்:

  • துல்லியமான அமைப்பு
  • தியாகம் (நமக்குத் தேவையானதையும் பிறருக்கு கொடையளிப்பது)
  • சட்டத்தை மதிப்பது

18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து வடக்கு செருமனியில் இந்தப் புதிய பிரசியாவிற்கு பெரும் செல்வாக்கு இருந்தது. அரசியலிலும் பொருளியலிலும் வலிமையுடன் இருந்தனர். 1871இல் ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க் உருவாக்கிய செருமானியப் பேரரசில் புருசியா மையமாக இருந்தது.

Remove ads

புவியியல்

இன்றைய வடக்கு போலந்தின் சிறிய அங்கமாக இருந்தது. சிறிய அளவில் புருசி மக்கள் வாழ்ந்துவந்த அப்பக்குதிக்கு செருமானியரும் வாழ வந்தனர். 1934இல் இதன் எல்லைகளாக பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து, லித்துவேனியா இருந்தன. புருசியாவின் சில பகுதிகளை கிழக்கு போலந்திலும் காணலாம். 1918க்கு முன்னர் மேற்கு போலந்தின் பல பகுதிகள் புருசியால் இருந்தது. 1795 முதல் 1807 வரை பிரசியா வார்சாவாவையும் மையப் போலந்தின் பெரும்பகுதியையும் அடக்கியிருந்தது.

1934க்கு முன்னர் இந்த நிலப்பகுதிகள் புருசியாவின் அங்கமாக இருந்தன:

  • மேற்கு புருசியா, கிழக்கு புருசியா, இவை தற்போது போலந்திலும் உருசியாவிலும் உள்ளன
  • பொமரேனியா
  • சிலேசியா
  • பிரண்டென்பேர்க்
  • லூசாசியா
  • சக்சனி மாநிலம் (தற்போது சக்சனி-அனால்ட்)
  • அனோவர் இராச்சியம்
  • இசுக்லெசுவிக்-ஓல்சுடெய்ன்
  • வெஸ்ட்பேலியா
  • ஹெஸென் அங்கங்கள்
  • இரைய்ன்லாந்து
  • தெற்கில் சில சிறுபகுதிகள்

வட-கிழக்கு செருமனி பெரும்பாலும் சீர்திருத்தத் திருச்சபையினராகையால் பல புருசியர்களும் சீர்த்திருத்தவாதிகளே. இருப்பினும் இரைன்லாந்து, கிழக்கு புருசியா, போசென், சிலேசியா, மேற்கு புருசியா, எர்ம்லாந்து பகுதியிலுள்ள மக்கள் கத்தோலிக்க திருச்சபையினராகும். தெற்கு செருமனியின் மாநிலங்கள் (குறிப்பாக ஆஸ்திரியாவும் பவேரியாவும்) கத்தோலிக்கத் திருச்சபையினராகையால், புருசியாவின் செல்வாக்கை விரும்பவில்லை. புருசியா பெரும்பாலும் செருமானியர்களாக இருந்தபோதும் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய போலிய பகுதிகளில் ஏராளமான போலிய மக்கள் வாழ்ந்து வந்தனர். 1918இல் இந்தப் போலிய பகுதிகள் போலந்திற்குத் திருப்பி யளிக்கப்பட்டன.

Remove ads

துவக்க வரலாறு

1226இல் போலிய இளவரசர் கான்ராடு, டிரான்சில்வேனியாவின் டியூட்டானிக்க மறவர்களை தனது எல்லையிலிருந்த புருசிய பழங்குடிகளுடன் சண்டையிட தனது இடமான வடபோலந்திருந்த மசோவியாவிற்கு வர வேண்டினார். இந்தச் சண்டை 100 ஆண்டுகளுக்கும் மேல் நடந்தது. அப்போது புதிய நாட்டையும் உருவாக்கினர். தொடர்ந்து இந்த நாடு இன்றைய எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியாவின் பெரும் பகுதிகளையும் வடக்குப் போலந்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. 1466 முதல் இம்மறவர்கள் போலந்து அரசரின் ஆளுகையில் இருந்தனர்.[4] 1525இல் மறவர்களின் தலைவர் சீர்திருத்தத் திருச்சபைக்கு மாறினார். தனது மறவர்கள் இருந்த இடத்தை போலந்து அரசரின் கீழ், புருசியா சிற்றரசாக உருவாக்கினார்.

அக்காலத்தில் புருசியா சிற்றரசின் நிலப்பகுதி விசுத்துலா ஆற்றின் கழிமுகத்தின் கிழக்கே இருந்தது. 1618இல் புருசியாவின் புதிய சிற்றரசராக பிராண்டன்பர்கின் ஜான் சிகிசுமன்ட் பதவி ஏற்றார். இவர் திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றவர். அச்சமயத்தில் பிராண்டன்பர்கை ஓயென்சோலர்ன் குடும்பம் ஆண்டு வந்தது. பிராண்டன்பர்கு புனித உரோமைப் பேரரசில் இல்லாதிருந்தது. எனவே இப்பேரரசில் இணைய பிரசியாவுடன் இணைய விரும்பியது. புதிய நாட்டிற்கு பிரண்டென்பேர்க்-புருசியா எனப் பெயரிட்டது. இந்நாட்டின் நடுவே போலியப் பகுதிகள் இருந்தன; இருப்பினும் பிரண்டென்பேர்க்-புருசியா போலந்திலிருந்து விலகத் துவங்கியது. முதலாம் பிரெடெரிக் காலத்தில் புருசியா மாக்டெபர்கிலும் ரைன் ஆற்றின் மேற்கிலுமுள்ள பகுதிகளை கைப்பற்றியது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads