புருலியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
புருலியா (Purulia) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள புருலியா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கொல்கத்தாவிற்கு வடமேற்கே 312.கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 22 வார்டுகளும், 23,754 வீடுகளும் கொண்ட புருலியா நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,21,067 ஆகும். அதில் 62,351 ஆண்கள் மற்றும் பெண்கள் 58,716 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12653 (10.45%) ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 942 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.09% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 82.66%, முஸ்லீம்கள் 13.57%, கிறித்தவர்கள் மற்றும் பிறர் 2.22% ஆகவுள்ளனர்.[1]
Remove ads
போக்குவரத்து
இருப்புப் பாதை
புருலியா தொடருந்து நிலையத்திலிருந்து கொல்கத்தா, கரக்பூர், ஆசன்சோல், சாப்ரா, போர்பந்தர், தாம்பரம், டாடா நகர், திப்ருகார், கவுகாத்தி, பாட்னா, பொக்காரா ஸ்டீல் சிட்டி, ராஞ்சி, புரி, புவனேசுவரம் நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[2]
கல்வி
- சித்தோ கன்கோ பிர்ஷா பல்கலைக் கழகம்
- ரகுநாத்பூர் கல்லூரி
- அச்சுருராம் நினைவுக் கல்லூரி
- விக்ரம்ஜித் கோஸ்வாமி நினைவுக் கல்லூரி
- பல்ராம்பூர் கல்லூரி
- ஜெ. கே. கல்லூரி
- காசிப்பூர் மைக்கேல் மதுசூதன் மகாவித்தியாலயா
- நிஷ்தரணி மகளிர் கல்லூரி
- புருலியா அரசு பொறியியல் கல்லூரி
- புருலியா பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரி
- சைனிக் பள்ளி
- இராமகிருஷ்ண மிசின் வித்தியா பீடம்
புருலியா ஆயுத வழக்கு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads