பூஷண் இராமகிருஷ்ண கவாய்
இந்திய நீதிபதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூசண் இராமகிருஷ்ணா கவாய் (Bhushan Ramkrishna Gavai, பிறப்பு: 24 நவம்பர் 1960), மே 14 2025 முதல் இந்திய உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாகப் பணியாற்றி வருகிறார்.[1] இவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியாக இருந்தார். மேலும் இவர் சில தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் பணியாற்றி வந்தார்.[2][3][4] இவர் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் தலைமை அலுவல் புரவலராகவும் உள்ளார்.[5]
நாக்பூரிலுள்ள மகாராட்டிரா தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தின் முதல்வராக இருந்தார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா மே 13 அன்று ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.[6][7][8]
Remove ads
குடும்பம்
கவாய், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஆளுனருமான இரா. சூ. கவாய் - கமலா இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தந்தை இந்தியக் குடியரசுக் கட்சி (கவாய்) பிரிவை நிறுவி நடத்தி வந்தார். இவரது சகோதரர் இராஜேந்திர கவாயும் ஓர் அரசியல்வாதியாவார். இவரது குடும்பம் அம்பேத்கரால் ஈர்க்கப்பட்டு பௌத்த மதத்தைப் பின்பற்றுகிறது.[9][10][11][12]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads