இரா. சூ. கவாய்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமகிருஷ்ணா சூர்யாபன் கவாய் (Ramkrishna Suryabhan Gavai) (30 அக்டோபர் 1929 - 25 ஜூலை 2015), "தாதாசாகேப் கவாய்" என்று பிரபலமாக அறியப்படும் இவர், ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக ஆர்வலரும், அம்பேத்கர் இயக்கத்தின் மூத்த தலைவரும், இந்திய குடியரசுக் கட்சியின் (கவாய்) நிறுவனரும் ஆவார். இவர் அம்பேத்கரின் சித்தாந்தக் கட்சியான இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவராக இருந்தார். இந்தக் கட்சியின் மூலம், இவர் அரசியலிலும், சமூகத் துறைகளிலும் பல பணிகளைச் செய்தார். பல்துறையறிஞரான இவர், அம்பேத்கருடன் பணியாற்றினார். இவர் பீகார், சிக்கிம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்களின் ஆளுநராக இருந்தார். அத்துடன் இந்திய பாராளுமன்றத்தில், மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். மகாராட்டிரா சட்டமன்றத்தில் மேலவை உறுப்பினராக 30 ஆண்டுகள் இருந்தார். அந்த சமயத்தில் அதன் தலைவராகவும், துணை தலைவரராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றினார்.
Remove ads
வாழ்க்கையும் தொழிலும்
கவாய், 1929 ஆம் ஆண்டு மகாராட்டிராவின் அமராவதி மாவட்டத்தில் தர்யாபூரில் பிறந்தார்.[1][2] அம்பேத்கரையும், பௌத்தத்தையும் பின்பற்றினார்.[3][4] தொழிலில் விவசாயியான இவர் தீவிர மல்யுத்த வீரராவார் . 1964 முதல் 1994 வரை, இவர் மகாராட்டிரா சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். அந்த நேரத்தில், 1968 முதல் 1978 வரை மேலவையின் துணைத் தலைவராகவும், 1978 முதல் 1984 வரை தலைவராகவும், 1986 முதல் 1988 வரை, 1990 முதல் 1991 வரை என இரண்டு முறை மேலவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.[5][6]
ஆளுநர்
1998 ஆம் ஆண்டில், இவர் அமராவதி மக்களவைத் தொகுதியிலிருந்து பன்னிரென்டாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] இவர் மகாராட்டிரா மாநிலத்திலிருந்து ஏப்ரல் 2000 வரை ஏப்ரல் 2006 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[7] ஜூன் 2006 இல் இவர் பீகார் ஆளுநரானார். 13 ஜூலை 2006 முதல் 12 ஆகஸ்ட் 2006 வரை சிக்கிமின் பொறுப்பு ஆளுநராக இருந்தார். 26 ஜூன் 2008 அன்று, கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[6] இவர் கேரளாவின் ஆளுநராக 10 ஜூலை 2008 அன்று பதவியேற்றார்.[8]
இவர், குஸ்தா மித்ரா விருதையும், அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கான தேசிய ஒருங்கிணைப்பு விருதுகளையும் பெற்றுள்ளார்.[6] அம்பேத்கர் சமராக் சமிதி, நாக்பூர் தீக்சா பூமி, அமராவதியின் அம்பேத்கர் சிக்சன் பிரசாரக மண்டலம் ஆகியவற்றின் தலைவராக இருந்தார்.[1]
Remove ads
குடும்பம்
இவர் 25 ஜூலை 2015 அன்று நாக்பூரில் இறந்தார். இவருக்கு கமல்தாய் என்ற மனைவியும் பூஷண் கவாய் (இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி), இராஜேந்திர கவாய் என்ற இரண்டு மகன்களும், முக்கிய அரசியல் தலைவரான கீர்த்தி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர்.[9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads