பெட்டாலிங் கொமுட்டர் நிலையம்

கோலாலம்பூர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் நிலையம் From Wikipedia, the free encyclopedia

பெட்டாலிங் கொமுட்டர் நிலையம்
Remove ads

பெட்டாலிங் கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Petaling Komuter Station; மலாய்: Stesen Komuter Petaling); சீனம்: 八打灵) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் லெம்பா பந்தாய், கம்போங் பாசிர் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் பெட்டாலிங் Petaling, பொது தகவல்கள் ...

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் மூலமாகச் சேவை செய்யப்படும் பெட்டாலிங் கொமுட்டர் நிலையம், பழைய கிள்ளான் சாலை; தாமான் ஓயூஜி (Taman OUG) மற்றும் தாமான் கெம்பிரா (Taman Gembira) குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பயணிகளுக்குச் சேவை செய்கிறது.

Remove ads

பொது

பெட்டாலிங் கொமுட்டர் நிலையம் பழைய கிள்ளான் சாலையின் மேற்கு முனைக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது. பழைய கிள்ளான் சாலை, பின்னர் பந்தாய் புதிய விரைவுச்சாலையுடன் இணைகிறது.

பெட்டாலிங் கொமுட்டர் நிலையம் பொதுவாக நெரிசல் நேரங்கள், பொது விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மிகப் பரபரப்பாக இருக்கும். இப்பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளதால் பள்ளி மாணவர்களும் இந்த நிலையத்தைப் பயன்படுத்துகின்றனர்.

கோலாலம்பூர் சென்ட்ரல்-இசுகைபார்க் வழித்தடம் (KL Sentral–Terminal Skypark Line) இந்த நிலையத்தின் வழியாகதான் செல்கிறது. ஆனாலும் கொமுட்டர் தொடருந்துகள் இங்கு நிற்பது இல்லை.

Remove ads

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம்

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் அல்லது கிள்ளான் துறைமுக வழித்தடம் (ஆங்கிலம்: Tanjung Malim–Port Klang Line) என்பது மலேசியாவின் மத்திய மாநிலப் பகுதிகளில் (KTM Komuter Central Sector), மலாயா தொடருந்து நிறுவனம், வழங்கி வரும் மூன்று தொடருந்து சேவைகளின் வழித்தடங்களில் ஒன்றாகும்.[2][3]

இந்த வழித்தடம், மின்சார தொடருந்துகள் மூலமாக இயக்கப்படுகிறது. கிள்ளான் துறைமுகம்; தஞ்சோங் மாலிம் ஆகிய இரு நகரங்களையும்; இந்த இரு நகரங்களுக்கும் இடையில் உள்ள 35 தொடருந்து நிலையங்களையும் இந்தச் சேவை இணைக்கின்றது.[4]

தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடச் சேவையில் சில தொடருந்து வண்டிகள் கோலாலம்பூர் நகரத்துடன் தங்களின் பயணச் சேவைகளை நிறுத்திக் கொள்கின்றன. 15 டிசம்பர் 2015-க்கு முன்பு, இந்தச் சேவை பத்துமலை வரை இருந்தது. ஆறு பெட்டிகள் கொண்ட 37 தொடருந்துகள் இந்தச் சேவையில் தற்போது ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

Remove ads

காட்சியகம்

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads