பெரிலியம் குரோமேட்டு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெரிலியம் குரோமேட்டு (Beryllium chromate) BeCrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] பெரிலியம் குரோமேட்டு சேர்மம் கருதுகோள் நிலையிலேயே உள்ளது. மந்த வாயுக்களுடன் ஒரு குறிப்பிட்ட பிணைப்பு திறனைக் கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.[2] இந்த வேதிப்பொருள் இருப்பதை ஆதரிக்கும் சிறிய சான்றுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Remove ads
தயாரிப்பு முறைகள்
பெரிலியம் குரோமேட்டை பெரிலியம் ஐதராக்சைடு மற்றும் குரோமியம் மூவாக்சைடு ஆகியவற்றை வினைபுரியச் செய்தால் கிடைக்கும் என்று கூறப்படுகிறது:[3]
- Be(OH)2 + CrO3 → BeCrO4 + H2O
பொட்டாசியம் குரோமேட்டுடன் பெரிலியம் சல்பேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் மேற்கண்ட வினைக்குத் தேவையான பெரிலியம் ஐதராக்சைடை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது:[4]
- BeSO4 + 2K2CrO4 + H2O → K2Cr2O7 + K2SO4 + Be(OH)2
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads