பொதுநலவாயம் (ஐக்கிய அமெரிக்கா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொதுநலவாயம் (Commonwealth) என்ற குறிப்பெயரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் தங்கள் முழுமையான, அலுவல்முறை மாநிலப் பெயர்களில் வைத்துக் கொண்டுள்ளன. இந்த நான்கு மாநிலங்களாவன: கென்டக்கி,[1] மாசச்சூசெட்ஸ்,[2] பென்சில்வேனியா,[3] வர்ஜீனியா ஆகும்.[4] இவை நான்குமே 1776க்கு முன்பாக, பிரித்தானிய குடியேற்றங்களாக (கென்டகி வெர்ஜினியா குடியேற்றத்தின் நிலக்கொடையாக துவக்கத்தில் இருந்தது) இருந்தன; இம்மாநில சட்டங்களிலும் கட்டமைப்புகளிலும் ஆங்கிலச் சட்டத்தின் தாக்கம் மிகுதியாக இருந்தது.[5][6]

"பொதுநலவாயம்" என்ற சொல்லை ஒரு மாநிலம் பயன்படுத்தும்போது எந்தவொரு அரசியல் நிலையையோ சட்டத் தொடர்பையோ குறிப்பிடுவதில்லை.[7] இச்சொல்லைப் பயன்படுத்துவோருக்கும் பயன்படுத்தாத மாநிலங்களுக்கும் எந்தவொரு வேறுபாடும் இல்லை.
மேற்கூறிய நான்கு மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களும் சில நேரங்களில் தங்களைக் குறிப்பிட "பொதுநலவாயம்" என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். காட்டாக, வெர்மான்ட், தனது அரசியலமைப்பில் மூன்று முறை "பொதுநலவாயம்" என்ற சொல்லை "அரசு" என்பதற்கு இணையாகப் பயன்படுத்தியுள்ளனர்.[8] இதேபோல, டெலவெயர் தனது 1776ஆம் ஆண்டு அரசியலமைப்பில் முதன்மையாக "மாநிலம்" என்றே குறிப்பிட்டாலும் அரசியலமைப்பின் ஒரு விதியில் "பொதுநலவாயம்" எனக் குறிப்பிட்டுள்ளது.[9]
இரண்டு ஐ.அ. ஆட்புலங்கள் பொதுநலவாயம் எனப் பெயரிடப்பட்டுள்ளன: புவேர்ட்டோ ரிக்கோ, வடக்கு மரியானா தீவுகள். மாநிலங்களல்லாத, அமெரிக்க இறையாண்மைக்குட்பட்ட பகுதிகளாக இருக்குமிடத்து இச்சொல் பயன்பாடு மூலம் இவை தாங்களே தீர்மானித்த அரசியலமைப்பின்படி தன்னாட்சி பெற்றவை எனவும் இவர்களது தன்னாட்சி உரிமையை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் ஒருதலையாக விலக்க முடியாதென்றும் அறிவிக்கப்படுகின்றது.[7]
Remove ads
மேற்சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads