பொறந்த வீடா புகுந்த வீடா

வி. சேகர் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

பொறந்த வீடா புகுந்த வீடா
Remove ads

பொறந்த வீடா புகுந்த வீடா (Porantha Veeda Puguntha Veeda) 1993 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். வி. சேகர் எழுதி இயக்கியுள்ளார். சிவகுமார், பானுப்ரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், எஸ். எஸ். சந்திரன், குமரிமுத்து, கோவை சரளா, காஜா ஷெரிப், கே. எஸ். ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையில், 21 மே 1993 அன்று இப்படம் வெளியானது. 1994 ஆம் ஆண்டு, தெலுங்கு மொழியில் புட்டினில்லா மெட்டினில்லா என்ற பெயரில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[1][2][3][4]

விரைவான உண்மைகள் பொறந்த வீடா புகுந்த வீடா, இயக்கம் ...
Remove ads

வகை

குடும்பப்படம்

நடிகர்கள்

சிவகுமார், பானுப்ரியா, வடிவுக்கரசி, கவுண்டமணி, செந்தில், எஸ். எஸ். சந்திரன், குமரிமுத்து, கோவை சரளா, காஜா ஷெரிப், கே. எஸ். ஜெயலட்சுமி, ராதாபாய், திடீர் கன்னையா, ஒரு விரல் கிருஷ்ணா ராவ், மனோ, இடிச்சபுளி செல்வராஜ், சி. ஆர். சரஸ்வதி.

கதைச்சுருக்கம்

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அமுதா (பானுப்ரியா (நடிகை)), குடிக்கு அடிமையான தந்தை (குமரிமுத்து), மூன்று உடன் பிறந்தோர் ஆகியோரை காப்பாற்றி வருகிறாள். மறுபக்கம், செல்வந்தரான படித்த ரவி (சிவகுமார்), அகந்தை கொண்ட தாய் நிர்மலா தேவி (வடிவுக்கரசி) மற்றும் படிக்காத தந்தையுடன் வாழ்ந்து வருகிறான். ரவியின் மனநலம் பாதிக்கப்பட்ட தங்கை மோஹனா (கோவை சரளா) வேலையில்லாத நபர் ஒருவருக்கு திருமணம் ஆனவள்.

ரவி, தன் குடும்பத்தை நன்கு பார்த்துக்கொள்ளும் பெண்ணாக அமுதா இருப்பாள் என்று எண்ணி, நண்பன் வள்ளுவர்தாசன் உதவியுடன், அமுதவாவை திருமணம் செய்கிறான். திருமணம் ஆன பின்பும், பிறந்தவீட்டிற்கு பண உதவி அமுத செய்வாள் என்ற நிபந்தனையுடனே திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு, புகுந்தவீட்டை பராமரிப்பதற்காக தன் வேலையை ராஜினாமா செய்ய அமுதாவுக்கு நேரிடுகிறது. அதே சமயம், அமுதாவின் தந்தை இறப்பதால், அவளது சகோதரர்கள் அவள் வீட்டிற்கு அடைக்கலம் புகுகிறார்கள். நல்ல மருமகளாக அமுதா நடந்து கொண்டாலும், அனைத்திலும் தவறு கண்டு பிடிக்கிறார் மாமியார் நிர்மலா தேவி. இந்நிலையில், அவமானம் தாங்க முடியாமல், வீட்டை விட்டு அமுதாவின் சகோதரர்கள் சொல்லிகொள்ளமல் வெளியேறுகிறார்கள். அவர்களை தேடி செல்லும் பொழுது, அமுதாவின் கர்ப்பம் கலைந்து, குடும்பத்தில் பிளவு ஏற்படுகிறது. இறுதியில், அமுதா எவ்வாறு குடும்பத்தை இணைத்தாள் என்பதே மீதிக் கதையாகும்.

ஒலிப்பதிவு

வாலியின் பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்தார். 5 பாடல்களைக் கொண்ட தொகுப்பு, 1993 ஆம் ஆண்டு வெளியானது.[5][6]

  1. தொந்தரவு பண்ணாதீங்க
  2. அம்மா பதில் சொல்லடி
  3. வீட்டுக்கு விளக்கு
  4. சந்திரிகையும்
  5. பொங்கலோ பொங்கலைய்யா

வரவேற்பு

இயக்குநர் தேர்ந்துடுத்த கதை களமும், திரைக்கதையும், நகைச்சுவையும் நல்ல விமர்சனங்களைப் பெற்றன.[7]

மேற்கோள்கள்

வெளி-இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads