பௌண்டர நாடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பௌண்டர நாடு (Pundra kingdom), பரத கண்டத்தின் கிழக்கில் தற்கால மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் ஆகியவற்றின் பகுதிகளைக் பகுதிகளைக் கொண்டிருந்தது.
Remove ads
பாகவத புராணத்தில்
ஜராசந்தனின் கூட்டாளியான பௌண்டர நாட்டு மன்னர், கிருஷ்ணரைப் போன்று வேடம் தரித்து, தானே உண்மையான பௌண்டர வாசுதேவன் எனக் கூறிக்கொண்டான். பின்னர் இம்மன்னர் ஒரு போரில் கிருஷ்ணரால் கொல்லப்பட்டான்.
மகத நாட்டின் கௌதம தீர்க்கதமஸ் எனும் முனிவரின் மகனான பாலியின் வழித்தோன்றல்களே பௌண்டர நாடு, அங்க நாடு, வங்க நாடு, கலிங்க நாடு மற்றும் சுக்மா நாடுகளின் மன்னர்கள் ஆவார்.
மகாபாரதக் குறிப்புகள்
தருமரின் இராசசூய வேள்வியின் போது, பௌண்டர நாட்டு மன்னர் வங்க நாடு மற்றும் கலிங்க நாட்டு மன்னர்களுடன் காணப்பட்டார் எனச் சபா பருவம், அத்தியாயம் 33-இல் குறித்துள்ளது.
குருச்சேத்திரப் போரில்
குருச்சேத்திரப் போரில் பௌண்டர நாட்டுப் படைகள் கௌரவர் அணியில் சேர்ந்து, பாண்டவர்களுக்கு எதிராக போரிட்டனர். (மகாபாரதம் 7:20) ஆயிரக்கணக்கான பௌரண்ட நாட்டுப் படைகள் அருச்சுனனை எதிர்த்துப் போரிட்டது.[1]
பிற குறிப்புகள்
- மத்சய நாட்டின் மன்னரின் பெயர் பௌண்டர-மத்சயன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. (மகாபாரதம் 1: 67)
- திரௌபதியின் சுயம்வரத்தில் பௌண்டர நாட்டு மன்னர் பௌண்டரகன் என்பவர் கலந்து கொண்டார் என ஆதி பருவம், அத்தியாயம் 188-189-இல் குறிப்பிட்டுள்ளது. (1:188)
- பீமனின் போர்ச் சங்கின் பெயர் பௌண்டரம் ஆகும். (மகாபாரதம் 6: 25, 51).
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads