மகாமேகவாகன வம்சம்

From Wikipedia, the free encyclopedia

மகாமேகவாகன வம்சம்
Remove ads

மகாமேகவாகன வம்சம் (பெரும் தேர் சேர்வைகாரர்) என்பது, மௌரியப் பேரரசு வலிமையிழந்த பின்னர் கலிங்கத்தை கிமு 100 முதல் கிபி 400 முடிய 500 ஆண்டுகள் ஆண்ட பண்டைய அரச வம்சங்களில் ஒன்று. இவ்வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளனாகிய காரவேலன் தொடர்ச்சியான படையெடுப்புக்கள் மூலம் இந்தியாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான். காரவேலனின் தலைமையின் கீழ் கலிங்கத்தின் படை வலிமை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. இக்காலத்தில் கலிங்கப் பேரரசு வடக்கே மகதம் முதல் தெற்கே பாண்டிய நாடு வரை பரந்திருந்தது.

விரைவான உண்மைகள் மகாமேகவாகன வம்சம்ମହାମେଘବାହନ, பேசப்படும் மொழிகள் ...
Thumb
உதயகிரிக் குன்றில் மாமன்னர் காரவேலனின் 17 வரிகள் கொண்ட ஹாத்திகும்பா கல்வெட்டு, "Corpus Inscriptionum Indicarum, Volume I: Inscriptions of Asoka by அலெக்சாண்டர் கன்னிங்காம்", 1827 நூலில் வரைந்த படி

இவ்வம்சத்தினரின் ஆட்சியின்கீழ் குறிப்பாகக் காரவேலனின் ஆட்சியின் கீழ், கடல் ஆதிக்கம் பெற்றிருந்த கலிங்கம், இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, போர்னியோ, பாலி, சுமாத்திரா, ஜாவா போன்ற நாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது.

Remove ads

இவ்வம்சத்து அரசர்கள்

  1. விருத்தராஜன்
  2. காரவேலன்
  3. குடேபசிரி
  4. பதுக்கா
  5. மகாசாதன்
  6. சாதாவின் வழியினர்

மகாமேகவாகன வம்ச காலத்திய கட்டிடக் கலை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads