மகாமேகவாகன வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாமேகவாகன வம்சம் (பெரும் தேர் சேர்வைகாரர்) என்பது, மௌரியப் பேரரசு வலிமையிழந்த பின்னர் கலிங்கத்தை கிமு 100 முதல் கிபி 400 முடிய 500 ஆண்டுகள் ஆண்ட பண்டைய அரச வம்சங்களில் ஒன்று. இவ்வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளனாகிய காரவேலன் தொடர்ச்சியான படையெடுப்புக்கள் மூலம் இந்தியாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான். காரவேலனின் தலைமையின் கீழ் கலிங்கத்தின் படை வலிமை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. இக்காலத்தில் கலிங்கப் பேரரசு வடக்கே மகதம் முதல் தெற்கே பாண்டிய நாடு வரை பரந்திருந்தது.

இவ்வம்சத்தினரின் ஆட்சியின்கீழ் குறிப்பாகக் காரவேலனின் ஆட்சியின் கீழ், கடல் ஆதிக்கம் பெற்றிருந்த கலிங்கம், இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, போர்னியோ, பாலி, சுமாத்திரா, ஜாவா போன்ற நாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது.
Remove ads
இவ்வம்சத்து அரசர்கள்
- விருத்தராஜன்
- காரவேலன்
- குடேபசிரி
- பதுக்கா
- மகாசாதன்
- சாதாவின் வழியினர்
மகாமேகவாகன வம்ச காலத்திய கட்டிடக் கலை
- கணேச கும்பா குகை எண் 10, உதயகிரி குகை
- ஹாத்தி கும்பா, உதயகிரி குகை எண் 14
- தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் & நவமணி கும்பாவின் பெண் தெய்வங்கள்
- தீர்த்தங்கரகளின் சிற்பங்கள்
- சர்ப்ப கும்பா, குகை எண் 13, உதயகிரி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads