இன்பம்
உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இன்பம் (ⓘ) (happiness) என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன. சிறப்பாக "இன்பம் என்கிற பொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும்" என சோ. ந. கந்தசாமி இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
மேலும் அவர் "பொருளதிகாரத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் என்பன முழுமையாக இன்பப் பொருண்மையினைப் பேசுவன. பொருளியல், மெய்ப்பாட்டியல் 95 விழுக்காட்டிற்கு மேல் இன்பம் சார்ந்த பாலியல் மரபுகளைப் பற்றியன. மேலும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது, தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும் என்று தொல்ல்காப்பியர் இன்பத்திற்கு ஏற்றம் கொடுத்து ஓதியிருத்தல் எண்ணத் தக்கது" என்று சுட்டிக் காட்டுகிறார்.[1] தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது.
Remove ads
ஒலிப்பு
‘இன்பம்‘ என்ற இணையொலியானது பின்வருமாறு பிரிக்கப்படமுடியும்: ‘ இ + ன் + ப் + அ + ம்.‘ ஆகவே, ‘இன்பம்‘ என்பது: "உள்(ன்) நிறைவு(இ) ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் (அ) மயக்கத்தன்மை(ம்)" யாகும்.
வரைவிலக்கணம்
இந்தநிலையில், "உள்நிறைவு ஒன்றிலிருந்து தோன்றும், அல்லது உண்டாகும் தன்மை கொண்டிருக்கும் மயக்கத் தன்மை" உடையதை ‘இன்பம்‘ என்போம். உள்நிறைவுத் தன்மையானது மனிதனுக்குப் பலவிதமானவைகளால் உருவாக்கப்பட முடியும்.
இவற்றையும் பார்க்க
- புருஷார்த்தம்
- நல்நோக்கு உளவியல் (positive psychology)
- மகிழ்கலை
- போகம்
- இன்பியல் (hedonism)
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads